தமிழகத்தில் வாழ்ந்து இன்று வேற்று நாட்டில் வயிற்றுக்காக வாழ்பவன். இங்கு சுத்தமான குடிநீர், தடையில்லா மின்சாரம், ஒழுங்கான சட்டம் போன்று எத்தனை இருந்த போதும் திரும்பி வர விருப்பம். வர ஏ̀ற்பாடுகளை தொடங்கிவிட்டேன்.
Saturday, 12 November 2011
ராஜ்குமாரின் பக்கம்: பிறள்வு
ராஜ்குமாரின் பக்கம்: பிறள்வு: மணி இரவு ஒன்பதரை. இப்பொழுதெல்லாம் சீக்கிரமே அசதி வந்து விடுகிறது. உறக்கமும் விழிப்புமில்லாத ஒரு மயக்க நிலை. நிகழ்காலத்திற்கும், கடந்தவைக்கும...
Sunday, 21 August 2011
பொலி காளை
சங்கர் என்று அழைக்கப்பட்ட சங்கரராமன் நான். என் வாழ்க்கையில் சமூகத்தின் கோரமுகத்தை ஒன்றிரண்டு தடவை நேரே பார்த்திருக்கிறேன். இன்று நான் ஒரு கம்பெனியின் சேர்மன். சென்னையின் முக்கிய சாலையிலிருந்து பிரியும் குறுக்குச்சாலையில் இருந்த அலுவலகத்தில் நான் கம்பெனி நிர்வாகம் செய்துகொண்டிருந்தேன். என் ஆரம்பம் தமிழ் நாட்டின் ஒரு கிராமத்தில். கொஞ்சம் நிலமிருந்ததால் ஊரில் பெரிய குடும்பம். விவசாயமும் கொஞ்சம் வியாபாரமும் இருந்ததால் வாழ்க்கை வசதியாக நடந்தது.
பக்கத்தில்இருந்த பெரிய ஊரில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். நன்றாக படித்ததால் எனக்கு அப்பொழுதே நல்ல பெயர். பள்ளி முதல் என் கிராமம் வரை எனக்கு நல்ல மரியாதை. அதை எந்த வழியிலும் நான் கெடுக்கவில்லை. பள்ளியில் என்னைவிட மூத்த மாணவர்களுக்கும் நான் பாடம் நடத்தியதால் ஆறுமுகத்தை எனக்கு நன்றாகவே தெரியும்.
ஒரு நாள் பள்ளிக்கு செல்கையில் அந்த சம்பவத்தைப்பார்க்கும் வரை உலகம் குதூகலகமாகவும், நளினமாகவும்தான் தெரிந்தது.உண்மை சரியாக தெரிந்ததில்லை. எல்லோரும் நல்லவர்களே, எல்லோரும் ஒழுங்காகவும் சரியாகவும் நடந்துகொள்வார்கள் என்ற மாயையில் வாழ்ந்து வந்தேன்.
அந்த சம்பவம் அவன் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. அப்பா அதை கேள்விப்பட்டவுடனே என்னை ஊரைவிட்டு அனுப்பிவிட்டார். காலையில் அது நடந்தது. மதியத்திற்கு முன் சென்னை செல்லும் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஏதோ கனவில் நடந்தது போல் சென்னையில் அத்தை வீட்டில். மறு நாளே ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டு படிக்க ஆரம்பித்தேன். எட்டாவதில் தமிழ் வழிக்கல்வியில் இருந்து ஆங்கில வழிக்கல்வி. ஆறு மாதம் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் மற்ற மாணவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகும் பொழுது இதற்கெல்லாம் காரணமென்று நான் நினைத்த ஆறுமுகத்தின் மேல் அளவிலாத கோபமும் எரிச்சலும் எனக்கு ஏற்படும்.
பள்ளியில் பாடங்களும் மற்ற மாணவருடன் ஏற்பட்ட நெருக்கமும் படிப்பில் ஆர்வம் உண்டாக ஊரையும் நடந்தவற்றையும் மறக்கடித்தது.
காலம் என்னை வேறு பாதைகளில் செலுத்த கிராமத்தை விட்டு வெளியே இருக்கும் உலகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பத்தாவது வகுப்பிற்கு வரும் முன்பு படிப்பில் முன்னில். நகரத்தின் வாய்ப்புக்களை நன்றாக உபயோகித்துக்கொண்ட எனக்கு வெற்றி ஒவ்வொரு இடத்திலும் வாய்த்தது. படிப்புமட்டுமில்லாமல் வேலையிலும் வெற்றியே.
எனிலும் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கிராமமும் அதன் இழந்த வாழ்க்கைநினைவுக்குவரும். உடனே அதை பாதியில் ஒழித்த ஆறுமுகமும் ஞாபகத்து வருவான்.
ஆறுமுகம் ஜாதிப்பெயரை பெருமையுடன் சேர்த்துக்கொள்ளும் ஆள். அந்த ஜாதியின் முகமாக வன்முறை ஆக்கப்பட்டிருந்தது. கொலைமட்டும் செய்பவர்கள், கொஞ்சம் உயர்வு, அதனுடன் திருடுபவர்கள், கொஞ்சம் கீழ்.
என்னை விட சில வருடங்கள் மூத்தவன். வயது கடந்து பள்ளியில் சேர்ந்ததாலும், சில வருடங்கள் பரிட்சையில் தேராததாலும் பள்ளி இறுதி வகுப்பில் என்னுடன் சேர்ந்த்தான். ஆசிரியர் என்னையும் அவனையும் ஒன்றாக சேர்த்து விட்டார். டே, அவனுக்கு சொல்லிக்குடு. உன்னோட சேர்ந்தா, நல்லா படிப்பாம்டே என்று சொன்ன பொழுது மறுக்காமல் ஏற்றுக்கொண்டேன். ஆறுமுகம் நன்றாகவே படித்தான். ஆனால் திடீரென்று வராமல் நின்று விடுவான். ஏனென்று கேட்டாலும் பதில் வராது. பள்ளி செல்லும் வழி என் கிராமத்திலிருந்து, அடுத்த ஊர் நுழையும் வழியில் சந்து திரும்பும் இடத்தில் அவன் வீடு. வலது புறம் அவன் வீடும், இடது புறத்தில் அவன் தாய் மாமன் வீடும். என் ஊருக்கு போகும் பொழுது அவன் வீட்டில் நுழைந்து பேசிவிட்டு போவது வாடிக்கையாகிவிட்டது. அவன் தந்தை இல்லை என்று மட்டும் சொல்லியிருக்கிறான். ஆகவே காட்டையும் வீட்டையும் அவன் தாய் பார்த்துக்கொள்கிறாள். சிறிய தம்பி, தங்கைகள். அவர்கள் யாரும் அவனுடன் அவ்வளவாக ஒட்டி நான் பார்த்ததில்லை. அப்பொழுது அது காரியமாகவும் படவில்லை.
இறுதி ஆண்டின் பொங்கல் விடுமுறைக்கு வெளியூர் சென்று விட்டு அன்றுதான் ஊர் திரும்புகிறேன். பெரிய பையனாகிவிட்டதாக நினைப்பில் தனியாக ஊர் திரும்ம்பிக்கொண்டிருந்தேன். பள்ளியுள்ள பக்கதூரில் இறங்கி என் ஊருக்கு போகும் பேருந்துக்காக காத்திருக்கவேண்டும். அல்லது ஒரு மைல் தூரம். நடந்து விடலாம். போகின்ற வழியில் ஆறுமுகத்தின் வீட்டிலோ அல்லது வெளியிலோ பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் அரட்டையடித்து விட்டு போகலாமென்று அவன் வீட்டுப்பக்கம் போனேன். போகும் வழியில் அந்த கோரத்தைப்பார்த்தேன்.
ஆறுமுகத்தின் தாய்மாமன் எனக்கு முன்னெ நடந்து போய் கொண்டிருந்தான். வேறு வண்டியிலிருந்து இறங்கியிருக்கவேண்டும்.அவன் பின்னே நான் அவர்கள் வீடு நோக்கி போகும் வேளையில்,ஆறுமுகம் கையில் அரிவாளுடன். வரும் ஆபத்தை அவன் மாமன் அறிந்தானோ இல்லையோ. மெதுவாக நடந்து கொண்டிருந்தான். எனக்கே அது ஆபத்து என்று வெட்டு விழுந்தபின்தான் தெரிந்தது.டேய் என்ற சத்தத்துடன் முதல் வெட்டு. ஆறுமுகம்தான் வெட்டினான். சொந்த மாமனை வெட்டுவது நான் கனவில் கூட நினைக்க முடியாதது. கழுத்துக்குக்கீழ் வெட்டு வாங்கியும் ஓடாமல் திரும்பி இடுப்பிலிருந்து சிறிய கத்தியை எடுத்து ஆறுமுகத்தை குத்தப்போனார். ஆனால் அந்த முயற்சியில் முழு மனதாக ஈடுபட்டதாக தெரிய வில்லை. சம்பந்தப்பட்ட இருவருமே ஓடவோ வேறு எந்தவிதத்திலும் உணர்ச்சிவசப்படவோ இல்லை. இறுகிய முகங்களுடன், சாவகாசமாக ஒருவரை ஒருவர் கவனித்துக்கொண்டு ஒரு வாய்ப்புக்காகவும், தற்காப்புடன் சுற்றிவந்துகொண்டிருந்தனர். ஆறுமுகத்தின் மாமா கொட்டும் ரத்தத்தை கண்டுகொள்ளவேயில்லை.
ஆறுமுகத்திற்கு அவர் எந்த வகையிலும் காயத்தைஏற்படுத்தவில்லை. ஆறுமுகத்திற்கு அவரை தாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தினார். ஆறுமுகத்தை தாக்கவோ அல்லது அந்த இடத்தை விட்டு அகலவோ முயற்சிக்கவோஇல்லை.இதை வாய்ப்பு என்பதைத்தவிர வேறு எப்படி விவரிப்பது என்று எனக்குத்தெரியவில்லை.
நடுவீதியில் சுற்றி நிற்பவரை கொஞ்சம் கூட கவனிக்காமல் ஒரு முக்கியமான ஆனால் சாதரணமான காரியத்தை செய்வது போல் ஒருவரை ஒருவர் சுற்றி வந்து கொண்டிருந்தனர். ஆறுமுகத்தின் மாமா தாக்கவோ தற்காத்துக்கொள்ளவோ முயன்றதாக எனக்குத் தோன்றவில்லை. ஆறுமுகத்தை கண்டு கொள்ளவெயில்லை. ஆறுமுகம் அவன் மாமனை இரண்டாவது முறையாக வெட்டினான். அவன் மாமன் சிறிய முனகலுடன் அவனை திரும்பி பார்த்தார். அப்பொழுது கூட அவனிடமிருந்து தப்பிக்கவோ தற்காத்துக்கொள்ளவோ, தாக்கவோ முயல்வில்லை. மூன்றாவது வெட்டில் அவர் கீழே விழுந்தார். ஆறுமுகம் அவசரப்படாமல் அவர் மேல் உட்கார்ந்து கழுத்தை அறுத்து தலையை தனியாக எடுத்து பின் வலது கையையும் வெட்டி தனியாக எடுத்துக்கொண்டு இரண்டையும் ஒரு பையில் போட்டு நடக்க ஆரம்பித்தான். அவன் யாரையும் குறிப்பாக பார்க்கவில்லை, ஆனால் யாரையும் கண்டுகொள்ளாமல் விடவுமில்லை. இது நடக்க ஒரு கால் மணியிலிருந்து அரை மணியாவது ஆகியிருக்கும். முகம் இறுக்கமாக ஒரு உணர்ச்சியுமில்லாமல் இருந்தது. ரத்த சகதியில், தலையில்லாமல் கிடக்கும் அந்த முண்டம் வெகுநாட்களுக்கு என்னை வெருட்டிக்கொண்டிருந்தது. அது அவர் மனிதனாக இருந்தபொழுது வெள்ளை உடையில் சுத்தமாகவும், உயிருடனும் இருந்தார். கிடக்கும் அது அவரில்லை. எனக்கு முன்னே நடந்த மனிதர் கரிய நிறமாக இருந்தாலும் களையானவர். முகத்தில் மண்டியிருந்த வெள்ளை தாடி கூட ஒரு கவர்ச்சியாகத்தான் இருந்தது. சில நிமிடங்களில் எல்லாம் முடிந்து அவர், அதுவாக.
எப்படி வீடு வந்தேனென்று இன்று வரை நினைவில்லை. அப்பா மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்த பொழுது அம்மா அவரிடம் விஷயத்தை சொன்னாள். உடனே வண்டியில் ஏற்றப்பட்டு சென்னை செல்லும் வண்டியில் பயணித்து அன்று இரவுக்குள் வெகு தூரம் வந்து விட்டேன்.
மீண்டும் ஊர் சென்றது வெகு நாட்கள் கழித்து. அந்த வழி செல்லும் பொழுது மனிதர்கள் சாதாரணமாக அவ்வழி நடப்பது ஒரு அதிசயமாக எனக்கு தோன்றியது. நகரும், அல்ல, ஓடும் காலம் எல்லாவற்றையும் மறக்கடித்து விட்டது.
வருடங்கள் ஆகிவிட்டன. இப்பொழுது அந்நினைவுகள் அவ்வளவாக வருத்துவதில்லை. அந்நிகழ்வின் காரணம் தெரியாத்தால் என்னைப்பொறுத்தவரை அது முடிவு பெறாததாகவும் இன்னும் ஏதோ நடந்து அது முடிய வேண்டுவது போலும் எனக்குத்தோன்றும்.
இன்று இவ்வளவு நினைக்கக்காரணம் ஆறுமுகத்தை மறுபடியும் சந்தித்ததால்தான். என் அலுவலகம் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில். வெளிநாடுகள் பலவற்றில் வேலை பார்த்துவிட்டு அங்கு கிடைத்த அனுபவத்திலும், பணத்திலும் உருவாக்கியது. நான் மற்றவனுக்கு உழைத்தது முடிந்து, மற்றவர்கள் எனக்காக உழைக்கின்றனர்.
மாடி உள்ள வீடு வாழ்வதற்கு. பல மாடிகளுள்ள கட்டிடம் அலுவலுக்கு. பணம் ஒரு பொருட்டாக இல்லாமல் வங்கி கணக்கில் கிடந்தது. பணம் பண்ணும் ஆசையை விட, பேர் பண்ணும் ஆசையும், சாதிக்கவேண்டுமென்ற ஆசையும் என்னை செலுத்திக்கொண்டிருந்தது.
அன்று என் காரில் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தேன். ஓட்டி வண்டியை ஓட்ட அடுத்த இலக்கை யோசித்தவாறு வெளியே பார்த்த அந்த வேளையில் ஆறுமுகத்தை சென்னை சாலையில் பார்த்தேன். பள்ளியில் பார்த்த பொழுது உயரமாக ஒல்லியாகத்தெரிவான். ஒட்ட வெட்டிய தலையுடன் பூனைமீசை முகத்தில். இப்பொழுது தாடியும் மீசையும் அங்கங்கு நரை. பட்டாபட்டி உள்ளாடைத்துணியில் வேட்டியாகவும் இல்லாமல் கைலியாகவும் இல்லாமல் ஒரு உடை இடுப்பில்.நிறம் மங்கி, சதை தொங்கி, காலம் அவனை வெகுவாகவே பாதித்திருந்தது. தன்னிச்சையாக வண்டியை ஓரத்தில் நிறுத்தச்சொல்லி அவனை பார்க்கச்சென்றேன். அவனுக்கு என்னை சரியாகத்தெரியவில்லை. நான் அவனை நினைத்ததைப்போல அவன் என்னை நினைவில் வைத்திருக்க அவசியம் இல்லை. அன்று அவன் கொலைசெய்யும் பொழுது அவன் எண்ணத்தில் ஆயிரம் இருந்திருக்கும் ஆனால் நான் இருந்திருக்க ஞாயம் இல்லை. என்னில் அந்தக்கொலை ஏற்படுத்திய தாக்கம் அவனுக்குத்தெரிந்திருக்க ஞாயம் இல்லை.
எடுத்துச்சொல்ல்லி ஞாபகப்படுத்தினேன்.
வழ்க்கு கொஞ்ச நாள் நடந்ததாம். தலையையும், மச்சமிருந்த கையையும் வெட்டி எடுத்துக்கொண்டு ஆறுமுகம் மலைப்பக்கமாக கேரளா போய்விட்டானாம். அவனும் அவன் தாயும் ஒரு கிரிமினல் வக்கீலிடம் ஆலோசனை கேட்டு செய்தது. இறந்தது அவன் மாமா என்றே நிரூபிக்க முடியவில்லை, ஆகவே அவனை குற்றவாளியென்று நிரூபிக்கமுடியவில்லை. வழக்கு நடத்த காடுகரையெல்லாம் விற்க வேண்டியதாகிற்று.
சொந்தத்திடம் கெட்டபேர். ஊரைவிட்டு வந்து இங்கே சிறு வியாபாரம் செய்து பிழைக்கிறான்.இன்னொரு மாமன் மகளை கல்யாணம் செய்து கொண்டு பல ஊர்களில் வாழ்ந்து பின் இப்பொழுது இங்கே. அவ்வப்பொழுது செல்லுபடியாகும் சிறு வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்துகிறான்.
பழைய விஷயங்களை ஒருவருக்கு ஒருவர் நினைவு படுத்திய போதிலும், அந்த விஷயம்தான் திருப்பி, திருப்பி எங்களை பேசவைத்தது. ஏன் என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை. மேலோட்டம்மாக பார்த்தால் இவன் அப்பனை, அவன் கொல்ல, அவனை இவன் கொன்று விட்டான். ஆனால் அதுவா காரணம்.
இவன் கொன்ற மாமனின் மகன் இதே போன்று எங்கேயோ அவன் தாயால் ஒரு பொலி காளை போல் வளர்கிறானோ? என்கோ யாரோ இதுதான் வீரம் என்று சொல்லிவிட்டு போய்விட்டதால் ஒரு சமூகமே விலை கொடுக்கிறதா?
அதன் பின் ஆறுமுகத்தை நான் பார்க்கவுமில்லை, அதைப்பற்றி யோசிக்கவுமில்லை.
பானை மண்ணோ பொன்னோ
ஒரு நண்பரின் இடுகையை பார்த்தேன். அவரை ஒட்டியோ, வெட்டியோ எழுதுவது என் நோக்கமல்ல. அதை பார்த்தவுடன் எனக்கு தோன்றியதை எழுதுவதே என் நோக்கம்.
பானை வாங்குவது அதன் கொள்ளும் வசதிக்கே. அது மண்ணாயிருப்பதும், பொன்னாய் இருப்பதும் அவரவர் சௌகரியத்தைப்பற்றிய விஷயம்.
ஆனால் நம்மில் பலர் கொள்வதான அதன் முக்கிய நோக்கத்தை விட்டு விட்டு அதன் வெளிதோற்றமான சுவற்றை பார்க்கிறோம். அது மண்ணா, பொன்னா என்பது முக்கியமாகப்போய்விடுகிறது.
என்ன சொல்லப்ப்டுகிறதென்பது மறைந்துபோய் யார் சொல்கிறார்கள்மென்பது முக்கியமாகிவிடுகிறது.
யார் யார் வாய் கேட்பிலும் என்பது மறந்து போகிறது.
இன்றைய நாட்டு நிலையில் நாம் எடுக்கும் நிலைப்பாடுகள் நம் சொந்த சொந்த சிந்தனையிலிருந்து வராமல், யார் சொன்னதையோ, அல்லது சொல்வார்கள் என்ற நினைப்பிலிருந்தோ வருகிறது. மேலும் ஒருவரின் மதிப்பு அவர் என்ன செய்தார் என்பதல்லாமல், அல்லது அவர் சொன்னதை நன்றாக ஆராயாமல், அவர் சொன்னதாலேயெ வேத வாக்காகி விடுகிறது.
ஒரு உதாரணத்திற்கு "தீக்குள் விரலை விட்டால்" எப்படி சிந்தித்தாலும் அது எனக்கு இன்பமாகத்தோன்றவில்லை. என் மதிப்புக்குரிய பாரதி சொன்னதால் அதில் ஏதாவது இருக்குமோ என்று ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தேன். இன்நிலையில் நான் செய்ய விரும்புவது அவர் சொன்னதில் எனக்கு ஒப்பு இல்லையென்றே. அது இன்பமென்று சொல்வது எனது அறிவை கொச்சைப்படுத்துவதாகவே எனக்கு படுகிறது.
பாரதியை யே நான் கொஞ்சம் உரசிப்பார்த்தால் மற்றவரை நான் ஏன் அப்படியே விழுங்க வேண்டும்?
நான் சொல்வதை நீங்களும் கல்லில் உரசிப்பாருங்கள், அல்லது நிறுத்துப்பாருங்கள். நீங்கள் இதை அப்படியே விழுங்கி வேறு எங்கேனும் வாந்தி எடுப்பது உங்களுக்கோ, எனக்கோ பெருமையல்ல.
Thursday, 4 August 2011
பிறள்வு
மணி இரவு ஒன்பதரை. இப்பொழுதெல்லாம் சீக்கிரமே அசதி வந்து விடுகிறது. உறக்கமும் விழிப்புமில்லாத ஒரு மயக்க நிலை. நிகழ்காலத்திற்கும், கடந்தவைக்கும் பல நேரங்களில் வேறுபாடு தெரிவதில்லை. கீழ் அறையில் இருந்த இருக்கையிலே உட்கார்ந்தபடி, எதொ ஒரு காலத்தில். என் ஏழு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. அவள் என் கண்ணீன் மணி.ஆடி வரும் தேர். ஒரு தகப்பனுக்கு பாசமுள்ள மகள் அப்படித்தான் தெரிவாள். பொதுவாக எல்லா குழந்தைகளும் ஒன்றரை இரண்டு வயது வரை பெற்றோரே உலகம் என்று திரியும். பின்பு விளையாடும் தன் வயதொத்த பிள்ளைகள் முக்கியமாகி பெற்றோர் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்படுவர். ஆனால் என் மகள் என்னை இன்னும் நேசித்தாள். நானே அவளுக்கு நடுநாயகம். என்னை ச்சுற்றித்தான் அவள் உலகம். வீட்டில் நுழைந்தவுடன் ஓடி வந்து காலைக்கட்டிக்கொள்வாள். பின் தூங்கும் வரை கோந்து போட்டது போல அப்படி ஒரு ஒட்டு. என் முகம் பார்க்கும் அவள் முகத்தில் விகசிக்கும் பாசம். மலர்ந்து அப்படி ஆசையுடன் பார்க்கும்.
என் சொரசொரத்த முகத்தில் அவள் முகத்தை அப்படி ஈஷிக்கொள்வாள். அப்பொழுது சத்தியமாக சொர்க்கம் நம்முன் சம்மணமிட்டு உட்காரும். பசி, தூக்கம் ஒன்றும் அண்டாது. கழுத்தை அவள் கை கட்டும் பொழுது மலர்போல. மாலை போல் ஆடும் உடல் ஒரு கனமும் இன்றி காற்று போல நிழல் போல என் மீது. சற்றே பிரிந்து என் முகம் பார்க்கும் அப்பொழுது அவள் முகத்தில் ஏற்படும் மலர்ச்சிக்கு இவ்வுலகையே விலையாகக்கொடுக்கலாம்.
வாழ்க்கை என் மகளைச்சுற்றி, என் மனைவி இதை ஒரு சாதாரண விஷயமாக பார்த்து புன்னகையுடன் எங்களை எங்கள் தனி உலகில் விட்டு விடுவாள்.
என் தொழில் ஒரு வியாபார சாம்ராஜ்யத்தில் முக்கியமான அங்கம். என் வேலையை எங்கிருந்து வேண்டுமானாலும் இருந்தும் செய்யலாம். தொழிலில் ஏற்படும் சிறிய அல்லது பெரிய தடங்கல்களை சரி செய்வது. பல ஊர்களில் இருக்கும் ஆலைகளிலும், வர்த்தக அலுவலகங்களிலும் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பது.
அலுவல் சம்பந்தமாக ஊர்களுக்கு போனாலும் ஓரிரு இரவுகளில் முடித்து விட்டு வந்து விடுவேன். மகளின் ஒவ்வொரு நாளிலும் கூட இருக்க வேண்டுமென்ற ஆசை. என்னைப்பற்றி அலுவலகத்தில் நன்றாகத்தெரிந்ததாலும், என் திறமையை நன்கு உணர்ந்ததாலும் என்னை அவர்கள் கண்டு கொள்வதில்லை. தனியார் நிருவனங்களில் வேலை நடந்தால் போதும். எப்படி நடக்கிறது என்று என்பது அவர்களுக்கு கவலையில்லை.
என் குடும்பம் நான், மனைவி, மகள். மற்றவர்கள் ஊரில் இருக்கின்றனர். விவசாய குடும்பத்தில் வெளியே வந்த முதல் தலைமுறை. எனக்கு இருக்கும் மண்பாசம் என் தந்தையை விட குறைவு, மகளுக்கு அது அந்நியம். ஆகவே விடுமுறைக்குக்கூட ஊருக்கு போவதில்லை.
அன்று இரவு ஒன்பது மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன். மூன்று தினங்களுக்கு முன் வீட்டை விட்டு போனவன் இரண்டு இரவுகள் கழித்து இன்றுதான் வருகிறேன். பம்பாய் சென்று அங்கு வேலையை முடித்து விட்டு காலைதான் வந்திறங்கினேன். வீட்டுக்குக்கூட வராமல் ராணிப்பேட்டை ஆலைக்கு சென்று விட்டேன். அங்கு இருந்தவர்கள் என்னைப்பற்றி தெரியாதவர்கள். நம்மாலே முடியாத காரியத்தை வெளியிலிருந்து வந்த இவனா செய்து விடுவான் என்ற இள்க்காரமும், தலைமை அலுவகத்தில்இருந்து வந்தவன் என்பதால் ஒரு பயத்துடனும் வளைய வந்தனர். என் தொழிலில் இது போல் எத்தனை பார்த்திருப்பேன்.
ஆலைக்குள் நுழைந்த நிமிடத்திலிருந்து ஒவ்வொரு இடுக்கிலும் நுழைந்து அலசி எங்கு பிழையென்று கண்டுபிடித்து அவர்களுக்கு சொன்னவுடன் வாய் பிளக்காத குறை. ஆலை மேளாளர்களை கலந்து எப்படி சரிசெய்வது என்று ஒவ்வொருவராக கலந்து பேசி அறிவுரை சொல்லி முடிக்கும் பொழுது மணி ஆறாகிவிட்டது. வீட்டுக்கு ஓடொடி வந்தேன்.
இன்று அவள் வரத்தாமதமாகிறது. அவளுக்குஅய்ந்து வயது ஆகும் பொழுதே அவளை மருத்துவராகவோ அல்லது பொறியாளராகவோ ஆக்க வேண்டுமென்று ஆசையில் பள்ளியைத்தாண்டி, தனிக்கல்வியும் தர ஏற்பாடு. அதை முடித்து வர இரவு ஒன்பதாகும். வழக்கமாக அவள் அன்னை அழைத்து வந்து விடுவாள். அவன் ஊரில் இருக்கும் வேளைகளில் விருப்பமாக செய்யும் காரியங்களீல் ஒன்று மகளை திரும்ப அழைத்துக்கொண்டு வருவது. சென்று அழைத்து வந்தால் உன்னும் அதிக நேரம் மகளுடன் இருக்கலாமே. தனிகல்விக்கு ஒரு வயதான வாத்தியார். ஓய்வு பெற்ற நல்லாசிரியர்.
இன்று திரும்ப தாமதமானதால் கூட செல்ல முடியவில்லை. மனைவி வீட்டை பூட்டி விட்டு போய்விட்டாள். மறு சாவி இருந்ததால் திறந்து சோபாவில் சாய்ந்து அவர்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.
கதவைத்திறந்து அவர்கள் வந்தவுடன் மகளை பார்த்தவுடன் எழுந்து ஆசையாக கைகளை நீட்டினேன். வழக்கமாக கைகளுக்குள் பாயும் என் மகள் பதறியது எனக்கு புதிது. கண்ணில் தெரிந்த அந்த பயம், வெறுப்பு, ரௌத்திரம் என்னை கொன்றது. என் மகளா? என்னைப்பார்த்தா? புரியாது என் மனைவியைப்பார்தேன். என் பார்வையைத்தவிர்த்து விட்டு மகளிடம் எதோ பேசிய படி மேலே சென்று விட்டாள்.
அவள் கீழே வரக்காதிருந்தேன். அப்படியே அசந்து விட்டேன்.
திடிக்கிட்டு எழுந்து நிகழ்காலத்திற்கு வந்தேன். இது நடந்து இருபது வருடம் ஆகியிருக்கும். அன்றிலிருந்து என் மகள் தேவதையிலிருந்து அரக்கியாக மாறினாள். தலைகீழாக மாறிய அவள் நடத்தை எங்கள் வீட்டை நரகமாக்கியது. படித்தாள் நன்றாக. தனிகல்விக்கு செல்ல மறுத்துவிட்டாள். என் திருப்திக்காக அந்த வாத்தியை உயிரைத்தவிர மற்ற எல்லாவற்றையும் எடுத்தும் என் ஆத்திரம் அடங்க வில்லை. அதனால் நடந்ததை அழித்துவிட முடியுமா?
மகளுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை, அதற்குள் மூன்று பேருடன் உறவு பின்பு பிரிவு. எத்தனையோ முறை, எத்தனையோ விதத்தில் அவளை அருகிப்பார்த்தேன். முதலில் ஒதுங்கி, ஒதுங்கிப்போனாள். கொஞ்சம் வளர்ந்தவுடன் கொத்தும் குதறும் வார்த்தைகள். தாங்காமல் என் மனைவி இறந்து விட்டாள். அதன் பின் கொஞ்ச நாள் வீட்டு க்குள் கைதி போல் கிடந்தாள். பின் வழக்கம் போல. செத்து விடலாம் என்று தோன்றும். மகள் தனியாகிவிடுவாளே என்ற ஒரே எண்ணம் என்னை ஒரு உயிருள்ள பிணமாக நடமாட வைத்தது.
மணி பதினொன்றரை. வீட்டு வாசலில் வண்டி சத்தம். அவளிடமுள்ள சாவி போட்டு திறந்து உள்ளே வந்தாள். நடையில் லேசான தள்ளாட்டம். என்ன குடித்தாளோ, எதை தின்றாளோ. முழுக்கையையும் மறைக்கும் மேல்சட்டை, கையில் அறுத்துக்கொண்ட தழும்புகளை மறைக்க. கால்சட்டை, ஏதோ கொஞ்சம் நகை. ஆதிவாசிகள் போல, வீட்டிலிருந்த என் மனைவி நகைகளை மனைவி உயிருடன் இருக்கும் பொழுதே மகள் எடுத்து விற்க ஆரம்பித்தவுடன் வங்கியில் வைத்து விட்டேன். சினிமா, மற்றும் விளம்பர படங்களில் ஏதோ செய்கிறாள். என்னிடம் பணம் கேட்பதில்லை.
அன்று உள்ளெ வந்தவள், என்னருகில் நின்றாள். கை என் தோளில் தலை குனிந்து ஏதோ சொல்லவோ கேட்கவோ ஆரம்பித்தாள். பின் கை மெதுவாக் என்னை விட்டு விலகியது.மௌனமாக விலகினாள்.
என் வாழ்வில் ஒரு திருப்பத்தின் ஆரம்பம்.

Wednesday, 27 July 2011
தமிழ்நாட்டின் தலைவிதி
லட்சக்கணக்கான பள்ளீ மாணவர்களின் எதிர்காலத்தைவிட தன் வரட்டு கௌரவம்தான் பெரிது என்று நினைக்கும் ஒரு அரசி. அவளுக்கு எடுத்துச்சொல்லக்கூட தைரியம் இல்லாத அமைச்சர் கூட்டம். ஏதும் செய்ய வக்கில்லாத மக்கள். இதுவா முன்னேற்றம். இதுவா ஜனநாயகம். ஒருவரிடம் கூடவா மாற்ற வழியில்லை
Sunday, 3 July 2011
கால்கள்
நாச்சிமுத்து ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்தார். அவருடைய வயது கருதி அவரென்றே அழைக்கலாம். பட்டினப்பிரவேசம், வேறு வழியில்லாததால். அன்றும் சரி இன்றும் சரி, ஊரில் பிழைக்க வழியில்லாதவர்கள் ஏதோ ஒரு வண்டியில் ஏறி சென்னை வந்து விடுகின்றனர். நாச்சியும் இதற்கு விதி விலக்கல்ல. வந்த இரண்டாம் நாள் அவருக்கு பிழைக்க வழி கிடத்து விட்டது. அன்று அங்கு அண்ணா சிலையில்லை. ரௌண்டானா என்று அழைக்கப்பட்ட அந்த இடத்திலிருந்து சின்ன சாலை பிரியும் இடத்தில் ஒரு கிழவன் செருப்பு தைத்துக்கொண்டிருந்தான். மிகவும் இணக்கமாக அவனடுத்து உட்கார்ந்த நாச்சி வேலை கேட்டான். கிழவனுக்கு இது புதிது. என்னவோ தோன்ற அருகில் உட்கார வைத்து ஊசி நூலைக்கொடுத்து தைக்க கற்று க்கொடுக்க அன்று முதல் நாச்சி கையில் ஒரு தொழில். தொழிலில் அவருக்கிருந்த ஆர்வம் செருப்பு தைப்பதிலும் ஒரு உயர்தரத்தை அடைய உதவியது.
காலம் ஓட அந்த இடம் அவரது பட்டா இல்லாத சொந்தமாகியது. காலையில் எட்டு மணிக்கே கடை போட்டுவிடுவார். தொழிலாளியின் பிய்ந்த செருப்பாக இருந்தாலும் சரி, விலை உயர்ந்த ஷூவாக இருந்தாலும் சரி, தொழிலில் ஒரு தரமிருக்கும். என்றைக்கும் இவ்வளவு வேண்டுமென்று கேட்டதில்லை. கொடுப்பதை அப்படியே வாங்கி உட்கார்ந்திருக்கும் சாக்குகிற்கு கீழே போட்டு விடுவார். சும்மா இருக்கும் நேரம் போகிற வருகிறவர்களின் கால்களை பார்த்து கொண்டிருப்பார். பல நேரங்களில் தொழிலே அதுவாகவும் அதற்கு வசதிக்காக செருப்பு தைப்பதாகவும் அவருக்கு தோன்றும். அவருக்கு முகங்களை விட கால்களே அழகு என்று தோன்றும். அழக்காக முகச்சாயம் பூசி கால்களின் பித்த விரிவுகளை கவனிக்காதவர்கள் மீது அளவிலாத கோபம் தோன்றும். அவருக்கு அழகென்று தோன்றும் கால்களுக்கு தலைக்கு கிரீடம் சூட்டுவது போல் செருப்பு தைத்து கொடுக்க ஆசை வரும்.
தொழிலில் தரமிருந்தால் இன்றில்லையெனில் நாளை ஒரு நாளேனும் வெற்றியும் புகழும் வருமாமே. அவருக்கு மெதுவாக வாடிக்கைகள் வர ஆரம்பித்தது. அவரிடம் செருப்பு சரி செய்தவர்கள் செருப்பு புதிதாக தைக்க கொடுத்தார்கள். அவர் தைத்த செருப்புகள் பார்வையாக இருக்காது, ஆனால் சௌகரியமாக இருக்கும். கால்களுக்கு வடிவாகவும் இருக்கும். நிச்சயமாக வெகு நாள் உழைக்கும். சௌகரியமில்லாத செருப்பு கடித்து துன்புற்றவனுக்குத்தான் தெரியும் நாச்சியின் அருமை. இன்னும் நாளாக ஆக அவர் கால்களுக்கு ஒரு மாதிரியாக வைத்தியமும் சொல்ல நேர்ந்த்தது. அதற்கு காரணம் கன்னியப்பன். அவன் சென்னையின் ஆதிகுடி. பல தலைமுறைகளாக சென்னையில் வசிப்பவர்கள் இவர்கள். இவர்களிடம் சொந்த வீடு இருந்தால் சென்னையின் பழைய பகுதிகளில் இருக்கும். அல்லது வேறு பகுதிகளில் வாடகைக்கு குடியிருப்பர். கன்னியப்ப்னின் மூதாதையையர்கள் சொந்த வீட்டில் எந்த காலத்திலும் குடியிருந்தவர்களல்லர். வானமே கூரையாய், பூமியே படுக்கையாய் தலைமுறைகளாக பட்டினத்தில் வாழ்பவர்கள். யாரும் மாதசம்பளத்திற்கு வேலை பார்த்ததில்லை. கன்னியும் அந்த வழியை தொடர்ந்தான். நாச்சியை அவன் சந்திக்கும் வரை. அவன் ஏதோ ஒரு கூலி வேலை செய்து கொண்டிருந்தான். நாச்சியின் கடையை கடந்து போகும் பொழுது செருப்பு தைத்து கொடேன் என்று கேட்டான். மறு பேச்சில்லாமல் செருப்பு அவனுக்கு கிடைத்தது. நாளைக்கு காசு கொடுக்கிறேன் என்று விட்டு போய்விட்டான். காசு கொடுப்பதாக அவனுக்கு அபிப்ராயம் அவனுக்கு இருக்கவில்லை. பல மாதங்கள் கழித்து அந்தப்பக்கமாக அவன் வந்த பொழுது அங்கு உட்கார்ந்திருந்த நாச்சியை பார்த்து சிரித்து விட்டு போய்விட்டான். அப்பொழுதும் காசு கொடுக்கவேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு இல்லை. அப்பொழுது கன்னியப்பனுக்கு வினை போலீஸ்காரன் ரூபத்தில் வந்தது. கன்னியப்பன் போன்றோருக்கும் போலீஸ்காரர்களுக்கும் ஏதொ ஒரு வகையில் உறவோ, பகையோ இருக்கும். கழுத்தில் கை விழுந்ததும் கன்னிக்கு போலீஸ் அடிவிழும் என்று ஓட முயற்சித்தான். நாச்சி அவனைத்தடுத்து போலீஸிடம் பேசிஅவனை விடுவித்தார். கன்னிக்கு வாழ்க்கையில் திரும்ப திரும்ப ஏமாறும் ஒருவனைப்பார்க்கிறோமோ என்ற எண்ணம் ஒரு நிமிடம் தோன்றியது. நாச்சியின் நட்பு தேவை என்ற எண்ணமும் தோன்றியது. நாச்சியைகெட்டியாகப்பிடித்துக்கொண்டான். நாச்சியோடு உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்தான். எனக்கும் ஒரு தொழில் பார்த்து குடேன் என்று சொல்லும் பொழுது கூட முழுமனதுடன் சொல்லவில்லை. இன்றும் ஏதாவது தேத்திக்கொண்டு போவதுதான் எண்ணமாக இருந்தது. ரிக்க்ஷா வாடகைக்கு பிடித்து தரேன், ஓட்டிக்கெயேன் என்று நாச்சி சொன்னவுடன் செய்துதான் பார்ப்போமே என்று ஆரம்பித்தது தொடராகி விட்டது. நாச்சி வேலை பார்க்கும் சாலையோரமே இரவு முடங்கி விடுவார். காலைக்கடன் கார்ப்பரேஷன் குளியலரையில். உணவு சோத்துக்கடையில். இரண்டு வேட்டி,சட்டைக்கு பெரிதாக பெட்டியோ,பீரோவோ தேவைப்படவில்லை. கன்னியப்பன் நாச்சியை முதல் தடவையாக ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றான், பிறகு அதுவும் வழக்கமாகி விட்டது. கன்னியும், நாச்சியும் தேவையினால் மட்டுமல்ல, சினேகத்தினாலும் கூடியிருக்க ஆரம்பித்தனர். கன்னியப்பன் போன்றவர்கள் சேர்கையினாலும் நல்லவராவதுண்டு. கன்னி ஏய்த்துப்பிழைக்கும் வாழ்க்கையை விட்ட பொழுது, நாச்சியின் சிபாரிசால் ஒரு ரிக்க்ஷா வாடகைக்கு கிடைத்தது. பிழைப்பதற்கு வழி கிடைத்தவுடன், நாச்சியிடம் ஒரு சொந்தம் பாராட்ட ஆரம்பித்தான். ஒரு ப்ரொப்ரைடரி சொந்தம், ஒரு உரிமை. நாச்சிக்கு, நல்லது, கெட்டது எல்லாம் அவன் முடிவு போல்.
ஒரு நாள் கன்னி முடிவு செய்து நாச்சியை கட்டுகுண்டாக தூக்கிச்சென்று ஒரு அறையில் வாடகைக்கும் அமர்த்தியாயிற்று. தினமும் கன்னியின் வண்டியில் காலையும் மாலையும் சவாரி. ஏறிக்கொண்டே போகும் செலவுக்கும் கூடவே வருமானம் வந்த்ததால் வாழ்க்கையில் பிரச்சனையில்லை.
நாச்சியின் வாழ்க்கையிலும் ஒரு மாதிரி வசந்தம் வந்தது. செல்லியின் ரூபத்தில். செல்லி பட்டினத்தின் பக்கமுள்ள கிராமங்களில் ஒன்றிலிருந்து பிழைப்புக்காக சென்னை வந்தவள். பதினாறு வயதில் உடம்பு இருந்தாலும் அவ்வளவு விவரமில்லை. யாரோ ஒருவன் வேலை வாங்கித்தருகிறேன் என்றவுடன் உடன் வந்து விட்டாள். அவன் நாச்சி இருந்த தெருவில் அவளை அழைத்துச்செல்லும் பொழுது அவளுக்கு என்ன தோன்றியதோ, அங்கேயே நின்று நாச்சியைப்பார்த்தாள். அவளை பக்கத்தில் உட்காரச்சொல்லி அவளின் கதையைக்கேட்டார். அவரின் சகா கன்னியப்பன்உடன் கலந்து ஒரு வீட்டைப்பிடித்து குடிவைப்பது என்று முடிவாகியது. ஆரவாரமோ, ஆர்ப்பரிப்போ இல்லாமல் அவர்கள் வாழ ஆரம்பித்தார்கள்.
பலரின் வாழ்க்கை இ து போலத்தான் ஆரம்பிக்கிறது. நாச்சி வேலையை முடித்து அங்கேயே தங்காமல் வீட்டுக்கு போக ஆரம்பித்தார். கன்னியப்பன்தான் வாகனஓட்டி. காலையில் வீட்டிலிருந்து கொண்டு வந்து விட்டு விட்டு சவாரி போவான். இரவில் திருப்பிக்கொண்டு விடுவான்.
வாழ்க்கை அது போக்கில் போக அவர்களும் வாழ ஆரம்பித்தார்கள். காலத்தின் ஓட்டத்தில் குழந்தைகள் பிறந்தார்கள். அவர்கள் வளர்ந்து பள்ளி சென்று படித்து பின் வேலைக்கும் போக ஆரம்பித்தனர்.
வாழ்க்கைத்தரம் உயர உயர தந்தை செருப்பு தைப்பது இழிதாகப்பட்டது. நாச்சியும், செல்லியும் அது பிடிக்காதவர்கள் வெளியே போய்விடலாம் என்றதும், பிள்ளைகள் யாரும் அதைப்பற்றி பேசுவதில்லை. மருமகள்களும், மருமகன்களும், பின்பு பேரன், பேத்திகளும் வந்த போதிலும் நாச்சியை யாரும் எதுவும் சொல்வதில்லை.
ஒருவனின் வாழ்நாள் சிலவரிகளில் எழுதப்பட்ட பொழுதும், நாச்சியின் வாழ்க்கை அதையும் தாண்டியும், அதற்கு மேலும்.
வாடிக்கையாளர்கள் அதிகம் வந்த பொழுதும் நாச்சி ஓரளவுக்கு மேல் தொழில் செய்வதில்லை. பிள்ளைகள் சம்பாதிப்பதால் நாச்சி ஒரு மாதிரியாக ஓய்வு எடுக்க ஆரம்பித்தார். ஆனாலும் கன்னியப்பன் தினம் அழைத்துக்கொண்டு போவதும், வருவதும் தொடர்ந்தது.
அன்றும் அது போல. இரவு கன்னியப்பன் அழைத்துச்செல்ல வந்த பொழுது நாச்சி உட்காரும் இருக்கையில் இருந்த சக்கரங்களில் ஊர்ந்து ரிக்ஷாவில் ஏரி உட்கார ரிக் ஷாவும் புறப்பட்டது.
Sunday, 22 May 2011
கலைந்த சில கனவுகள்
என் கிராமம் நாலு தெரு, அதன் உள் பிரிவுகளாக சந்துகள். மின்சாரம் மட்டும் வந்து மக்கள் அதை வைத்து உற்பத்தி செய்த காலம். சினிமா ஒன்றுதான், பொழுதுபோக்கிற்கு. இரண்டு காட்சி ஏழே காலுக்கும், பத்தே முக்காலுக்கும். இரண்டாவது ஆட்டம் காத்தாடும். கொட்டகை பக்கத்திலுள்ள டவுனில். முதலாளி காரைக்குடி செட்டியார்.செபஸ்தியான் மானேஜர். முதலாளியை விட பந்தா,கெத்து, குயுக்தி எல்லாம்.முதல் ஆட்டதிலேயே இரண்டாவது ஆட்டத்திற்கும் சேர்த்து காசு பார்த்துவிடுவார். என் பத்து வயதில் சினிமா பார்க்க அம்மாவுடன் செல்வது இழுக்காகத்தெரிந்தது. இல்லா விட்டால் பண்ணையாள் சுடலைமுத்துவுடன் போகவேண்டும் அது சடை. அப்பொழுதுதான் ராமநாத மாமா ஊருக்கு வந்தார்.
சொந்த மாமா அல்ல. ராணுவத்தில் ஆபிஸர் பயிற்சியில் பாதியில் ஓடிவந்தவர். சொந்த ஊர் கொஞ்சம் கிழக்கே. தூரத்து அண்ணன் உறவில் எங்கள் ஊர்காரர் ஒருவர் இருந்ததால் இங்கு பிரச்னைகள் தீரும் வரை இருக்கலாமென்ற உத்தேசம். அவர்கள் சாதிக்காரர்கள் உயரமாக, ஒல்லியாக மாநிறத்திலிருந்து தாமிர நிறம் வரை இருப்பார்கள்.
ராமநாத மாமா எல்லோரையும் விட வளர்த்தி. சுருள் முடியை குட்டையாக வெட்டி நறுக்கு மீசை வைத்திருப்பார். ஒருநாள் இரண்டுநாள் தாடியிருக்கும் முகத்தில், பாண்ட்ஸ் பௌடரும், கத்திரி சிகரெட்டும் கலந்த வாடை. புகைப்பது இப்பொழுது போல் குற்றமாக கருதப்படாத காலம்.அவரிடம் இந்த வாசனையை முகர்ந்து கொண்டே அவருடன் கூட நடக்க பிடிக்கும். நல்ல வாயல் வேட்டி. இரட்டை மடிப்பு. நுனியை கையில் பிடித்து கொண்டு கொண்டு வேகமாக நடப்பார், ஆனால் நான் கூட நடக்கும் போது வேகத்தை குறைத்துக்கொள்வார். ஊர் விஷயங்களை என் வயது பாராமல் பகிர்ந்து கொள்வார். பத்து வயது சிறுவனுக்கு ராமனாத மாமாவை ப்போன்றவர்கள் ஆதர்ஸங்களாகத்தெரிவார்கள். உலக விஷயங்களை சுவாரஸ்யமாக சொல்லிக்கொண்டே வருவார்.
ராணுவத்தில் டாங்கை எப்படி ஓட்டுவது என்பன போன்ற விஷயங்கள்(டாங்கின் சக்கரங்கள் ஒரு சங்கிலியில் கோர்க்கப்பட்டு தனித்தனியாக உருளும்).ஊருக்கு மேற்கே மலைத்தொடர். அடிவாரம் ஏறினால் மலைக்காடுகள். வனத்தின் ஓரம் வரை சென்று வருவோம். அக்காலத்தில் யானைகள் ஊர் தோட்டங்களுக்குநீர் தேடி வந்துவிடும். கொஞ்சம் பயமாக இருப்பினும் அது ஒரு சுவாரஸ்யம்.
பொன்னழககா காட்டு வேலைக்கு போகும். பொன்னழகு என் வீட்டில் வேலைசெய்பவர். அக்காலத்தில் வருடம் முழுவதும் வேலை செய்துவிட்டு கடைசியில் மொத்தமாக சம்பளம் வாங்கிக்கொள்ளும். பொட்டு தங்கம் அல்லது பாத்திர பண்டம் வாங்கி கொள்ளூம். எப்போதொ நடக்கப்போகும் கல்யாணத்திற்கு. நான் பிறந்ததில் இருந்து வீட்டில் இருப்பதால் வீட்டில் ஒன்றாகவே நினைத்தேன். அக்கா நன்றாகவே இருப்பாள் என்று அம்மா சொல்லுவாள். லட்சணமாக இருக்கடி. கல்யாணம் கட்டி நல்லா இருக்கப்போறடி என்பாள் அம்மா.
ஒன்றும் இல்லாவிட்டாலும் அழகு அக்காவிடம் நிறைய இருந்தது. செய்யும் வேலையும் அது போலவே. ஒரு நேர்த்தியும், நளினமும் இருக்கும். அம்மா அவளுக்கு பழைய சேலையும் துணியும் தருவாள். எங்கள் வீட்டு சமையல் அவளுக்கு அத்துபடி. ராமநாத மாமா எங்கள் வீட்டுக்கு வருவது எனக்காக என்று நான் அப்பொழுது தவறாக நினைத்திருந்தேன். அம்மா அவரை நாசுக்காக வரவேண்டாமென்று சொன்ன பொழுது கூட நான் அவருடன் பழகுவது பிடிக்கவில்லை என்றுதான் நினைத்தேன்.
பின்னொரு நாள் ராமநாத மாமாவையும் பொன்னழகு அக்காவையும் வேறு ஒரு சூழ்நிலையில் பார்க்கும் வரை.
விவசாய குடும்பத்தில் பிறந்ததால் வயல், மற்றும் காட்டுவேலைக்கு அம்மாவுடனும், பண்ணையாட்களுடனும் போக வேண்டும். பள்ளியில்லாத நாட்மளிலும் விடுமுறையிலும். ஊரைவிட்டு வெகு தூரத்தில் உள்ள காட்டுக்கு போக வேண்டிய சூழ்நிலைகள் ஒரு ரசமாக இருக்கும். இரவு வேளைகளில் தங்க வேண்டியதும் வரும். அது போல ஒரு நாள், இரவில் காட்டிலிருந்து வர வேண்டிய தாயிற்று. வரும் வழியில் ராமநாத மாமவும் பொன்னழகு அக்காவும் ஒன்றாகச்செல்வதை பார்த்தேன்.
சிறு வயதின் ஆர்வத்துடன் பின்னேயே சென்றேன்.
காமம் எனக்கு அப்பொழுது இதிகாச காதலாகத்தெரிந்தது. என் கற்பனையில் அவ்விருவரும் ஆதர்ச காதலராகத்தெரிந்தனர். அவர்களை பல இடங்களில் பின் தொடர்ந்தேன். ராமனுக்கு அனுமன் போல என்னை நினைத்துக்கொண்டேன்.
கருப்பு வெள்ளைப்படங்களில் வரும் கதாநாயகன், நாயகி போல் அவர்கள் என் கண்களில். யாருக்கும் தெரியாமல் அவர்கள் சந்திப்பது எனக்கு மட்டும் தெரிந்தது.
கவனமாக அவர்கள் இருந்தாலும், என் அம்மாவின் கண்களுக்குத்தப்பவில்லை. ஒரு நாள் பொன்னழகை தனியாக இழுத்துச்சென்று ஏதோ விசாரிப்பதை தெரிந்து கொண்டு மாமாவைத்தேடிச்சென்றேன். விஷயத்தை சொன்னவுடன் அவர் அதைப்பெரிதாக எடுத்துக்கொள்ளாதது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
என் கற்பனையில் அவர்கள் இருவரும் கிராமத்து வீதிகளில் மணம் செய்து கொண்டு வருவதைப்போலவும், யார் எதிர்த்தாலும் வாழ்ந்து காட்டுவது போலவும். அல்லது இருவரும் ஓடிப்போய் எங்கோ வாழ்வதைப்போலவும். பல வருடங்கள் கழித்து, ஏதோ ஒரு நகரத்தின் வீதியில், அவரை ஒரு அலுவலாரகவும், அக்காவை இரு குழந்தைகளுடனும் பார்ப்பது போலவும் எல்லாம் கனவு கண்டிருந்தேன்.
எனக்குத்தெரிந்தாலும் வெளியே என்னால் சொல்லமுடியவில்லை. ஒரு பார்வையாளனாககூட நான் இல்லை. என் வயது, மற்றும் வீட்டு நிலைமையினால் நான் இந்த நாடகத்தில் ஒரு அங்கம் கூட வகிக்கவில்லை. மனம் பொறுக்க முடியாமல் அம்மாவிடம் ஓடி அவர்களுக்காக வாதாடினேன். அது வரை அம்மாவுக்கு எனக்கு இந்த விஷயம் தெரியும் என்று தெரியாது.
ஏனோ என்னைத்தவிர மற்றவர்களெல்லாம் இதை வேறு மாதிரி பார்ப்பதாகத்தோன்றியது.
சினிமா பார்த்து ரொம்ப கெட்டுபோயிட்டடா, ஒழுங்கா பாடத்தை படிக்கிறத விட்டுட்டு இது மாதிரி செஞ்சுக்கிட்டிர்ந்தா, அப்பா கிட்ட சொல்லி ஹாஸ்டல போட்டிருவேன். இதைப்பத்தி வெள்யே யார்கிட்டயாவது சொன்னே. கொன்னுறுவேன்.
அம்மாவின் பெரிய ஆயுதம் ஹாஸ்டலில் சேர்த்து விடுவேன் என்பதுதான். நான் பள்ளிக்கு செல்லும் வயது வந்தவுடன் ஆரம்பித்த இந்த பேச்சு இது வரை முடியவில்லை. அப்பா என்னை வெளியூரில் படிக்க வைக்கவேண்டுமென்கிறார், அம்மாவுக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை. எனக்கு அதை ஏதோ பெரிய தண்டனை போல உருவகப்படித்தி வைத்திருக்கிறாள். நான் வீட்டில் ஒரெ பிள்ளையாதலால் பாட்டி இருக்கும் வரை வெளியூர் போய் படிப்பதற்கே இடமில்லை. ஆயினும் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து முடிவு செய்தால் என்ன ஆகும் என்று தெரியாததால் ஒரு சிறு பயம். அம்மா இந்த ஆயுதத்தை எடுத்தால் நான் படிந்து விடுவது வழக்கம். ஆயினும் காதலருக்கு உதவி செய்ய வேண்டுமென்று தோன்றியதால் பொன்னழகு அக்காவிடம் சென்று என் யோசனைகளை சொன்னேன். அம்மாவுக்கு தெரிந்ததும் என்னை கட்டு குண்டாகக்கட்டி அவள் அண்ணன் வீட்டில் கொண்டு விட்டு விட்டாள். அங்கே என் வயதில் பல உறவு மற்றும் நண்பர்கள். மாமாவுக்கு என் வயதிலும் ஒரு வயது குறைவாகவும் இரண்டு பையன்கள். அதற்கடுத்து இரண்டு பெண்கள். எங்கள் வயதால் நாங்கள் எல்லோரும் ஒன்றாக திரிந்தோம்.
அவர்களை எல்லாம் என் காதலருக்கு உதவும் திட்டத்தில் சேர்த்து விட்டேன். என் வயதொத்த என் நண்பர்கள் நடுவே எனக்கு கதாநாயக அந்தஸ்து. அவர்களுக்கு உதவும் திட்டத்தில் ஏராளமான யோசனைகள் திட்டங்கள். எல்லாம் என் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டன. என்னால் நிராகரிக்கப்பட்டன. பத்து பதினோரு வயதில் உள்ள சிறுவர்கள் சிந்திக்கும் திட்டங்கள் நிதர்ஸனத்திற்கு கொஞ்சமும் அருகில் வரவில்லை. கனவிலும், கற்பனையிலும் நாங்கள் அவர்களுக்கு நூறு வகை வாழ்க்கையும் ஆயிரம் வகை மணமும் செய்து வைத்து விட்டோம். நனவில் நான் இங்கே அவர்கள் என் கிராமத்தில்.
நாட்கள் ஓட ஓட மற்றவர்களுக்கெல்லாம் சுவாரஸ்யம் குறைந்தது. நானும் இவற்றை தள்ளி வைத்து விட்டு என்வயதுக்கொத்த விஷயங்களில் நுழைந்தேன். ஒரு மாதம் கழித்து அம்மா வந்து வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனாள். பள்ளி அதை விட்டால் வீடு. வேறு எதற்கும் நேரம் கிடைக்கவில்லை. ஒரு மாதப்பாடங்களை நான் முடிக்க வேண்டியிருந்த்தால் வேறு எதற்கும் நேரம் கிடைக்கவில்லை. என் ஆதர்ச காதலர்களை நான் தற்காலிகமாக மறக்க வேண்டியதாயிருந்த்து. யாரிடமும் கேட்க முடியாது. சுடலமுத்து ஒருவந்தான் ஏதாவது சொல்ல க்கூடும். ஆனால் அவனுக்கு ஒன்றும் தெரியாதது மற்றுமல்ல, மடையனும் கூட.
வாரங்கள் கழித்துதான் நேரம் கிடைத்து பொன்னழகக்கா வீட்டுக்கு ஓடினேன். அக்கா அங்கு இல்லை. கல்யாணமாகி சென்றுவிட்டதாக சொன்னார்கள். மாப்பிள்ளை பக்கத்து ஊர். அவர்களுக்கு சொந்தக்காரன். ராமநாத மாமாவையும் காணவில்லை. அவரைப்பற்றி கேட்கலாம். அதனால் அவர்கள் வீட்டில் கேட்டேன். அவர் ஊருக்கு போயிருப்பதாகச்சொன்னார்கள். என்ன நடந்தத்தென்று அறிய மனது துடித்தாலும், அதை அறிய வழியில்லாததால் அதை மறக்க முயன்றேன். வருடம் கடந்தது. அவ்வருடம் மாமா பிள்ளைகள் எல்லோரும் எங்கள் ஊருக்கு விடுமுறைக்கு வந்திருந்தனர். மறுபடியும் கதாநாயக அந்தஸ்து. காதலர்கள் சந்தித்த இடங்கள் எல்லாவற்றையும் காட்டவும். அவர்கள் அமர்க்காதலை விவரிக்கவும் நேரம் போதவில்லை. சாப்பிட மட்டும் வீட்டுக்கு. மற்ற நேரங்கள் முழுவதும். காட்டிலும் மேட்டிலும். சிறுவர் விளையாட்டில் நாட்கள் போனதே தெரியவில்லை.
திடீரென்று ஒரு நாள் கதாநாயகனும், கதாநாயகியும் திரும்ப வந்தனர். தத்தம் கணவன், மனைவியுடன். சினிமாவில் இது போல் எத்தனை காட்சிகள் பார்த்திருக்கிறோம் நாங்கள். காதலர்கள் இருவரும் சந்தித்து மனமுருகும் உணர்ச்சிபூர்வமான காட்சியை தவற விடக்கூடாது என்று நாங்கள் அவர்கள் பின்னாலேயே அலைந்தோம். நாங்கள் விளையாடும் சராசரி விளையாட்டுக்களை விட இது சுவாரஸ்யமாக இருந்தது. நாட்கள் நகர நகர எங்கள் ஆவல் தாங்கமுடியாத அளவு ஆயிற்று. ராமநாத மாமா ஊருக்கு போய் விட்டதால் எங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை.
வந்தவர்கள் எல்லாம் ஊருக்கு போய்விட இந்த காதல் கதையை நான் மறந்தே விட்டேன். என்றோ பார்த்த ஒரு படத்தின் கதை போல.
எல்லா கதைக்கும் ஒரு சுபம் என்ற முடிவு வருமல்லவா.
அன்றுதான் என் கனவு கலைந்தது. பொன்னழகு அக்கா வீட்டுக்கு வந்திருந்தாள். அம்மா காப்பி போடுக்கொண்டே என்னாடி எப்டி இருக்கே, சங்கையன் நல்லா வைச்சுருக்கானா என்று கேட்டாள். நான் அங்கிருப்பது அவர்களுக்கு தெரியாது.
அக்கா படீரென்று அம்மா காலில் விழுந்தாள். நல்ல வேளை என்ன கடவுள் மாதிரி காப்பாத்தினீங்கம்மா. உங்களை நம்பலை முதல்ல, அப்பறம் நீங்க சொன்ன மாதிரியே எல்லார் முன்னாலியும் என்ன கட்டிக்கிறேன்னு சொல்லுன்னவுடனே அவெ ஓடிட்டாம்மா. எம்புருஷன் தங்கம்மா பார்த்திகிறாரு. சந்தோஷமா இருக்கேன். அய்யாவும், நீங்களுந்தே என்னை சீப்படாம காப்பத்தினீங்க.
அவர்கள் மேலே ஏதேதோ பேச நான் நகர்ந்து விட்டேன். கதை, கனவுகள் கலைந்து,இவற்றிலிருந்து நகர்ந்து நிஜ வாழ்க்கைக்கு வந்தது வலித்தது.

Subscribe to:
Posts (Atom)