தமிழ் தமிழனின் மொழி. தெரிந்த இந்த விஷயத்தை சொல்ல க்காரணம். தமிழ் வாழ்க என்று சொல்வதற்கும் தமிழன் வாழ்க என்று சொல்வதற்கும் உள்ள வேறுபாட்டை அலசுவதற்காக. தமிழ் என்னும் மொழி தமிழன் என்பவன் மரித்தாலும் வாழும். ஆனால் தமிழன் இப்படி தமிழை கொலை செய்தால் வாழாது. பாரதி எந்த சூழ்நிலையில் தமிழ் இனி மெல்லச்சாகும் என்று சொன்னார் எனத்தெரியவில்லை.( அவர் சொன்னதில் இது ஒரு பகுதியே, முழுவதும் படிக்கும் பொழுது வேறு context என்பது புரியும்) ஆயின் இன்று தமிழன் பேசும் தமிழால் நிச்சயமாக தமிழ் சாகும்.
என் தொலைக்காட்சி பெட்டியில் சன், ஜெயா தீபம் யாழ் போன்ற காணொளிகள் வருகின்றன. இதில் ஒரு நாள் காலையில் ஜெயா, தீபம் இரண்டிலும் கண்டவை. ஜெயா தொலைக்காட்சியில் ஒரு கல்வியாளர் தென் தமிழ்நாட்டில் தமிழ் குடும்பத்தில் பிறந்து கல்வி கற்று இன்று கற்பிப்பவர். தீபத்தில் செய்திகள். ஜெயா காட்சியில் கல்வியாளர் பேசியதில் 50% ஆங்கில வார்த்தைகள், அல்லது அதற்கு மேலே. தீபம் செய்தியில் நிருவனங்கள் பெயர் சுருக்கி சொல்லப்பட்ட போது மட்டும் ஆங்கில எழுத்துக்கள் உச்சரிக்கப்பட்டன. சென்னையில் நடைபாதையில் யாரிடமும் வழி கேட்டால் ஆங்கிலம் கலக்காத பதில் வராது. இவர்கள் மத்தியில் தூய தமிழ் பேசினால் கேலியும் கிண்டலும். சில சமயங்களில் நாட்டுப்புறம் என்ற அடையாளம் வேறு. சரியான வார்த்தை தெரியாத பொழுது ஆங்கில வார்த்தை உபயோகம் பொறுத்துக்கொள்ளப்படலாம். ஆனால் அஸ் அ மேட்டர் ஒஃ கோர்ஸ் இங்லீஷை யூஸ் பண்ணணுமா. ராங் இல்லையா. டமில் வோர்ட்ஸை யூஸ் ப்ண்ணாம விட்டொம்னா வோண்ட் வீ பர்கெட் தெம். டாடி மம்மிகளே சில்றன்ஸ்கு டீச் பண்ணலைனா தென் ஹூ வில் டு இட். டமில் வால்க.
No comments:
Post a Comment