காந்தி வாத்தியார் என்று எல்லாராலும் அழைக்கப்ப்டும் மாணிக்கம் சுதந்திரம் நாட்டுக்கு வருவதற்கு கொஞ்ச காலத்திற்கு முன் பிறந்தவர். அவர் தந்தை சுதந்திர போராளி. சுதந்திரம் கிடைத்து சில வருடங்களில் மாணிக்கம் பள்ளிக்கு வேலைக்கு வந்து விட்டார்.
தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் நடுவில் உள்ள அவர் ஊரிலிருந்து மற்ற ஊர்கள் தொலைவிலிருந்ததாலும் நடுவில் காடு இருந்ததாலும் அவரது ஊர் வெளி உலகத்திலிருந்து ஒதுங்கியே இருந்தது. அவர் குடும்பம் சொத்தும் பேரும் கொண்டிருந்ததால் அங்கு மதிக்கப்பட்டது. காந்தியின் கொள்கைகள் மதிக்கப்பட்ட காலம். மாணிக்கம் கதர் அணியவும் காந்தியை பின்பற்றவும் ஆரம்பித்தார். ஏழு வயதில் அவரது ஊரில் மூவர்ணக்கொடியேந்தி ஒரு தொண்டன் ஒரே ஒரு தொண்டன் தெருவில் நடந்தான். அவனுடன் மாணிக்கம் மட்டுமே கூட. சுப்பையா பிள்ளை என்ற ஒரு ஏட்டு எங்கோ இருந்த ராஜாவுக்கு விசுவாசமாகவும், கலகக்காரர்களை ஜென்ம விரோதியாகவும் நினைத்து அந்த த்தொண்டனை அடித்து வீதியில் இழுத்துச்சென்ற பொழுது மாணிக்கம் மட்டுமே அவனுக்குத்துணையாக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். சுப்பையா பிள்ளை மாணிக்கத்தை வீட்டில் கொண்டு சேர்த்து விட்டு அவரின் ராஜத்துரோகத்தையும் புகார் சொல்லி விட்டு வந்தார். வெள்ளைக்காரனை தண்டிக்கும் கடவுளாக கருதும் அவர்கள் மாணிக்கத்தை பல நாட்களுக்கு வீட்டை விட்டே அனுப்பவில்லை.
சுதந்திரம்வந்தபின் ஆசிரியராக வேண்டுமென்று படித்து உள்ளூரிலேயே வேலைக்கும் சேர்ந்தும் விட்டார்.
வெள்ளையர்கள் வெளியேறினாலும் வறுமையும், அறியாமையும் வெளியேறவில்லையென்று அதை ஒழிக்காமல் மணம் செய்வதில்லை என்று முடிவு செய்தவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. சேவையென்பது கற்பித்தல் ஆயிற்று. பள்ளி அருகிலேயே ஒரு குடிசை, அது மெதுவாக வளர்ந்து ஒரு வீடு ஆனது. பள்ளி நேரத்தில் அங்கு கற்பித்தல். பின்பு வீட்டில். நாட்கள் வருடங்களாகி, மாணவர்கள் அவர்களின் பிள்ளைகள் பின்பு பேரக்குழந்தைகள் அவரிடம் கற்றார்கள்.
இது புதிதாக தலமை ஆசிரியர் வரும்வரை.
வந்தவர் புதிய யுகத்தவர். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன், ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலையில் அமர்ந்தவர்,தொலைகல்வியில் பட்டங்கள் பெற்று அதுவும் பலரின் உதவியில், பள்ளிக்கு ஆசிரியராக வந்தவர், கவனிக்க வேண்டியவர்களை கவனிக்கும் விதமாக கவனித்து பதவியில் உயர்ந்தார்.அதில் மாலா டீச்சரை ஒரு பள்ளித்துறை அலுவலருக்கு ஏற்பாடு செய்ததுவரைஅடங்கும்.
மாவட்டத்தின் பெரிய பள்ளியில் தலமை ஆசிரியராக இருந்தவர், நீட்டகூடாத இடத்தில் கையை நீட்டிவிட்டதால் வேலை போக இருந்தது. பிடிக்கவேண்டியவர்களை பிடித்ததால் வேலை மாற்றத்தோடு போனது.
தலைநகருக்கு மறுபடியும் போக அவர் முயற்சித்தார். அதற்கிடையில் வேலையும் கொஞ்சம் பார்த்தார். பள்ளியின் ஆவணங்களை புரட்டி பார்த்த பொழுது மாணிக்கத்தின் வயது அவருக்கு தெரிய வந்தது. எழுபது வயது கடந்தவர் இன்னும் வேலை பார்ப்பதா. அந்த வேலையை வேறு யாருக்காவது போட்டுக்கொடுத்தால் ஏதாவது தேறுமே, அது இல்லாவிட்டாலும் யாரையாவது திருப்திப்படுத்தினாலும் உதவுமே.
மாணிக்கத்திற்கு ஊரில் உள்ள மரியாதை தலைமை ஆசிரியருக்கும் தெரியும். ஆகவே கல்வித்துறையிலிருந்து உத்திரவு வந்ததுபோல் காட்டி ஓய்வு பெறுவதற்கு ஏற்பாடும் செய்துவிட்டார்.
மாணிக்கத்தை அழைத்து சார், உங்களுக்கு இப்படி நடந்த்தற்கு வருத்தமாகத்தான் இருக்கு, என்ன செய்ய, மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திச்சின்னா, கீழ்பட்டுத்தானெ ஆகணும் என்று சொல்லி உத்தரவைக்கொடுத்தும் விட்டார். மாணிக்கம் அதை பெரிது படுத்திக்கொள்ளவில்லை. கற்பிப்பதற்கு பள்ளியறைதான் வேண்டுமென்பதில்லையே. கற்பவனும், கற்பிப்பவநும் எங்கு கண்டு கொள்கிறார்களோ அதுதானே பள்ளியறை. ஓய்வு பெற்றால் வைப்புத்தொகை வருமே, அங்குதான் மாணிக்கத்திற்கு சனி பிடித்தது. அவரை அண்டி யாரும் இல்லாத ஒற்றைபிறவிக்கு கையில் வந்த பல லக்ஷங்கள் தேவையில்லாத ஒன்று. அதற்கு செலவழிக்க, மாணிக்கம் கண்ட வழி, நகர் நடுவே காந்திக்கு சிலை வைப்பது.
முடிவு செய்தது அவர். பணத்திற்கு மனு போட பள்ளிக்கு வந்தவரிடம், தலைமை, பணத்தை என்ன செய்யப்போகிறீர்கள் என்று சாதாரணமாகத்தான் கேட்டார். அவர் சிலை வைக்க நினைப்பதாக சொன்னவுடன், தலைமை இது போல் ஒரு மனுஷன் இருப்பானா, அதுவும் இந்த காலத்தில் என்று வியந்தாலும், அதில் என்ன ஆதாயம் பார்க்கலாம் என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார்.
முதலில் மனுஷனுக்கு எல்லா பணமும் வந்தாகவேண்டும். அதற்கான செலவை மனுஷன் செய்ய மாட்டான். அவர்தான் அதையும் செய்து முடிக்க வேண்டும், பிறகு அந்த பணத்தை செலவழிப்பதில் பங்கு பெறவேண்டும், வழிகளை தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார். அவருக்கா ஊரான் பணத்தை விழுங்குவதற்கு கற்றுக்கொடுக்கவேண்டும். கடைசி பைசா வரைசுருட்டுவதற்கு வழி கண்டுவிட்டார்.
பணம் மாணிக்கத்தின் கைக்கு வருவதற்குள் சிலைநிறுவன குழு உருவாக்கப்பட்டு விட்டது. உள்ளூர் சட்டசபை உறுப்பினர் குழுத்தலைவர், அவர் எல்லா கூட்டத்திற்கும் வருவதற்கு இயலாது என்பதால் தலைமை ஆசிரியர் உபதலைவராகவும் செயலராகவும் நியமித்துக்க்ஒண்டார்கள். சௌகரியமானவர்களை மற்ற உறுப்பினர்களாகவும் தலைமையே நியமித்து விட்டார். மிககவனமாக மாணிக்கத்தைத்தவிர வேறு யாரையும் அக்குழுவுக்குள் விடவில்லை.
முதல் குழு கூட்டத்திற்கு உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் தலைமை. தலைமை ஆசிரியரின் ஏற்பாடு. சமஉ ஆதியில் அந்த ஊர் மாட்டு தரகர். இப்பொழுது நூற்றுக்கணக்கான ஏக்கர் தோட்டம் பல தொழில். நான்கு முறை சட்ட மன்ற உறுப்பினர். இரண்டு கட்சிக்கும் போய்விட்டு வந்தவர். இரண்டு கட்சி தலைமைக்கும் வேண்டியதைச்செய்வதாலும் பல சட்டத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களை முடித்துக் கொடுத்ததாலும் இப்பொதைக்கு வேண்டியவர். ஆனால் இப்பொழுது கொஞ்சம் பிரச்சினையில் இருக்கிறார். சில கணக்கு வழக்கு தகராறு. ஆளும் கட்சிக்கு நல்ல பிள்லையாக வேண்டும். மாணிக்கத்தின் காந்தி சிலை அவருக்கு முக்கியமே இல்லை. ஆனால் ஊரில் நடக்கும் ஒரு விஷயத்திற்கு முன்னின்றால் நாளை எதாவது ஆதாயம் கிடைக்கும். கூட்டத்தின் அமைப்புக்கு முதலாக பணம் செலவளிய ஆரம்பித்தது. ஒவ்வொருவருக்கும் அமர்வு தொகை. மாணிக்கத்திற்கு ஒரு பொது விஷயத்திற்கு கூடுவதற்கு ஏன் பணம் வாங்கவேண்டுமென்று தெரியவில்லை.
காந்தி சிலை செய்ய இடம் முடிவாயிற்று. சிலை செய்ய சிற்பி யாரென்பதில் முதல் சிக்கல். இதற்காக சமஉ சென்னை செல்லும்பொழுது குழு கூட செல்ல வேண்டுமென்று யோசனை சொல்லப்பட்டது. ஏனென்றால் ஊரான் செலவில் சென்னை சென்றால் சொந்த விஷயங்களை பார்த்துக்கொள்ளலாமல்லவா. மாணிக்கத்திற்கு ஏன் இதற்கு இத்தனை பேர் செல்ல வேண்டுமென்று தெரியவில்லை. வேண்டாமென்று சொல்லிப்பார்த்தார். பணம் அவருடயது ஆனாலும் குழுவில் அவரது குரல் ஒன்றுதானே. பெருவாரியானவர்கள் ஓட்டு சென்னை செல்வதற்கு. ஆகவே சென்னை செல்வதென்று முடிவாயிற்று. மாணிக்கம் செல்லவில்லை. செலவு நூறு, ஆயிரங்களைத்தாண்டி லட்சங்களை தொட ஆரம்பித்தது. மாணிக்கத்தின் விருப்பங்கள் நடக்காதது மட்டுமல்ல. கணக்கில் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை.
ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் மாணிக்கதின் பணம் செலவாவதைத்தவிர வேறு ஒரு முன்னேற்றாமுமில்லை.
ஊரின் முக்கிய முச்சந்தியில் காந்தி சிலை நிறுவுவது மட்டுமே பல கூட்டங்களின் முடிவில் ஏற்பட்ட முன்னேற்றம். குழுவின் முடிவிற்கு காத்திருக்காமல் மாணிக்கம் முச்சந்தியில் பீடத்தை கட்டிவிட்டார். அதற்குள் பாதிக்கு மேல் செலவாகிவிட்டதால் முழு உருவச்சிலை மார்பளவில் நிருவ முடிவாகியது.
அதற்குள் வேறு உருவில் வினை வந்தது. சென்னை சென்ற சட்ட மன்ற உறுப்பினருக்கு ஆளும் கட்சித்தலைவரின் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
அவர் நிலைமை ஆட்டத்தில் இருந்ததால் அவர் ஏதாவது செய்தாக வேண்டும். அவர் முடிவு அதே முச்சந்தியில் ஆளும் கட்சி தலைவருக்கு சிலை வைக்க வேண்டுமென்பதே.
மாணிக்கம் காந்திக்கு சிலை வைப்பதால் யாருக்கு லாபம். அப்படியே வைக்க வேண்டுமென்றால் எதாவது வேறு இடத்தில் வைத்துக்கொள்ளலாமே.
காந்தி சிலை குழு அந்த இடத்தில் தலைவர் சிலை வைப்பதென்றும் மாணிக்கத்தின் பணம் அதற்கு உபயோகித்துக்கொள்லலாமென்றும் முடிவு செய்தது. மாணிக்கதின் ஓட்டு தவிர மற்ற ஓட்டுக்கள் இன்றைய தலவருக்கு. மாணிக்கத்தைத்தவிர மற்றவர்களுக்கு செத்துப்போன காந்தியை விட இன்று ஆளும் தலவர் பலசாலி என்பது தெரியாதா.
மாணிக்கத்தின் பணம் குழுவின் வங்கிக்கணக்கில் இருந்ததால் அவர் பணம் கூட அவருக்குக்கிடைக்கவில்லை.
வழக்காட அவர் விரும்பவில்லை.
அவருக்குத்தெரிந்த ஒரே அயுதம் அஹிம்சைதான். காந்தி கற்றுக்கொடுத்தது சத்யாகிரஹமும் உண்ணாவிரதமும்தான்.
அவர் உண்ணாவிரதம் இருக்கமுடிவு செய்ததுமட்டுமல்ல. அதற்கு தேர்ந்தெடுத்த இடம் அவர் சிலை நிறுவ ஏற்பாடு செய்திருந்த முச்சந்திதான்.
உண்ணவிரதம் ஆரம்ம்பிக்கும் வரை ஊர் சும்மாதான் இருந்தது. அவனவனுக்கு ஆயிரம் வேலைகள். இதில் எவனோ ஒருவன் உண்ணாவிரதம் இருந்தால் யாருக்கென்ன?
அதில் ஆதாயம் தேடுபரைத்தவிர. தலைமை ஆசிரியர் அடித்த கொள்லையில் பங்கு கிடைக்காதவர்களும், எதிர் கட்சிக்காரர்களும் மாணிக்கத்திற்கு ஆதரவு திரட்டினர். நான்கு நாட்களில் பத்திரிக்கைகள் செய்தியாக்கிவிட்டனர். கட்சித்தலைமை சம உ வை குடைய ஆரம்பித்துவிட்டது. சட்டமன்ற உறுப்பினருக்கு கௌரவப்பிரச்சினையாகி விட்டது.
சமஉ பிரச்சினைகளை சந்திக்காதவரல்ல. பிரச்சினைகளை தீர்க்கும் வகை வெட்டிவிடுவதுதான். இதற்கு அவருக்கு ஆயிரம் கைத்தடிகள் இருக்கிறார்கள். அவர்களின் ஒருவனிடம் வேலை கொடுக்கப்பட்டது.
இதற்கென்றே ஊரில் ஆட்களிருக்கிறார்கள். இரண்டு மூன்று ஆட்கள் கடந்து நாலாவது, அய்ந்தாவது ஆள் மூலம் காரியம் முடியும். சந்தேகம் இருந்தாலும் நிரூபிக்க முடியாது.
ஏழாவது நாள் இரவு முடிச்சு மாரியப்பன் மூலம் முடிந்தது.
மாரியப்பன் செய்தால் கொலையென்று யாருக்கும் சந்தேகம் வரவே வராது.
மாணிக்கம் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் ஒரு சிறு வெயில் மறைப்புடன் படுத்திருந்தார். நீர் மட்டும் குடித்துக்கொண்ட உண்மையான உண்ணாவிரதம். உடல் பாதியாக இளைத்து சுயநினைவும் சரியாக இல்லாமல் படுத்திருந்தார்.
அரை பாடி லாரியில் மாரியப்பன். யாருமில்லாத இரவு. மாணிக்கம் என்ன அரசியல்வாதியா? ஆயிரம் தொண்டர்களுடன் ஆறுமணி நேரம் உண்ணாவிரதம் பின்பு ஆப்பிள் சாற்றுடன் உண்ணாவிரத்தை முடிக்க.
தனியாகப்படுத்திருந்த மாணிக்கத்தை லாரியில் வைத்து பீடத்துடன் தேய்த்துவிட்டு போய்விட்டான்.
காலையில் கூழும் குப்பையுமாக உருக்குலைந்து கிடந்தார். பொதுமக்கள் எதற்கு கொதித்தெழுவார்கள் என்று தெரியாது. சிலசமயம் நல்ல விஷயத்திற்கும் குரல் கொடுப்பார்கள். மாணிக்கத்திற்காக போராட்டம் வெடிக்க ஆரம்பித்தது. சம உ வேறு வேறு பிரச்சினைகளை விதம் விதமாக சமாளிப்பவர். ஒருவனென்றால் முடித்துவிடலாம். ஊரையெ முடிப்பதென்றால் கொஞ்சம் கஷ்டம். அந்த அளவுக்கு இப்பொழுது போகவேண்டியதில்லை.
அதை விட சுலபம், அதை திசை திருப்பி விடுவது.
மாணிக்கம் சாவுக்கு, தன் சொந்த பிரச்சினைகளுக்கு என்று இரண்டுக்கும் வழி யோசித்தார். கிடைத்துவிட்டது.
மாணிக்கத்திற்க ஒரு சிலையை அதே இடத்தில் நிருவி விட்டு அதை திறப்பதற்கு கட்சித்தலைவரையே அழைத்துவிட்டால் இரு பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
சிலைதிறப்புவிழா கோலாலகல்மாக நடந்துமுடிந்தது. இறந்த மாணிக்கத்தைத்தவிர மற்ற எல்லோருக்கும் லாபம்தான். சம உ கட்சித்தலைமையிடம் நல்ல பெயர் வாங்கிக்கொண்டார். தலைமை ஆசிரியருக்கு விழாக்குழு பொறுப்பு. நிதி வசூலிலும் வருமானம். மேலும் ஆளும் கட்சியிலும் நல்ல பரிச்சியம். பின்பு உதவுமல்லவா.
மாணிக்கம் சுயநலம் இல்லாத ஒரு காலகட்டத்தின் அடையாளச்சின்னமாக முச்சந்தியில் நிற்கிறார். சிலையாக இருப்பதால் அவருக்கு மேலும் மனக்கஷ்டமில்லை. அவர் உருவசிலைக்கு மரியாதை செய்து விட்டதால் மற்ற எல்லாவருக்கும் ஈடுசெய்துவிட்டதாக நினைப்பு. சுபம்தானே.