zNEvjjb-DUfexzIBNUrYwveacRI ராஜ்குமாரின் பக்கம்: January 2011

Monday, 31 January 2011

சில எண்ணங்கள்

நமது அரசியலைக்குரித்து பலர் பேசும்பொழுது நமது அரசியல்வாதிகளின் தனிப்பட்ட மற்றும் `பொதுவாழ்வின் நடத்தைகளை ப்பற்றியும் பேசும் பொழுது அவர்களின் நடத்தையை எப்படி பொறுத்து கொள்கிறார்கள் என்று ஆச்சர்யம் கொள்கிறார்கள். அதைப்பற்றிய எனது கருத்து. இதில் இரண்டு விஷயங்கள் கலந்துள்ளன. ஒன்று இந்த அரசியல்வாதிகளை மக்கள் தமது சொந்தங்களாக நினைக்கிறார்கள். உடன்பிறப்பே , ரத்தத்தின் ரத்தமே போன்ற வார்த்தைகளை உண்மையாக எடுத்துக்கொள்கிறார்கள். நம்மக்கள் அண்ணனையோ தம்பியையோ விட்டுக்கொடுக்க நினைப்பதில்லை. அவர்கள் செய்யும் ஊழலையோ , சட்டமீரலியோ தப்பு என்று தெரிந்தாலும் தலைவர்களை விட்டுக்கொடுக்கக்கூடாது என்றே நினைக்கிறார்கள்.  தம் தலைவர்களைப்பற்றி எதிர்க்கட்சியினர் பேசினால் அசைக்க முடியாத ஆதாரம் இல்லாதவரை அவற்றை நம்புவது தம் தலைவர்களுக்கு செய்யும் துரோகமாக எண்ணுகிறார்கள்.
இரண்டாவது காரணம் அதில் கிடைக்கும் ஒரு vicarious ப்லீசுரே. ஏதோ அவர்களே காசடித்தது போல.
சிலர் இதைப்போன்ற அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பது சொந்த ஆதாயர்த்திக்காகவும்.
பணமோ அல்லது வேறு வகை( ஆள் பழக்கம், அல்லது அரசு பதவி போன்று) வசதி உள்ளவர்கள் யார் வந்தாலும் கவலைப்படுவதில்லை. அவர்கள் லஞ்சத்தையும் ஊழலையும் பற்றி பேசுவது ஒரு சுய சொரிதலே. உண்மையாக கவலைப்படும் சிலர் ஒன்று கஊடுவதே இல்லை. இதை மாற்ற elitist oligocracy போன்ற அமைப்பு என்பவை போல extreme measures அல்லது ஊர் கஊடி தேர் இழுப்பதோ நடந்தால் ஒழிய வேறு விடிவில்லை. 

Thursday, 6 January 2011

நாகரீகம்

நாம் எல்லாம் கொஞ்சமாவது நாகரீகம் உள்ளவர்கள். அடுத்தவர்களைப் பற்றி அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களை போரணி பேசுவதில்லை. ஆனால் இன்று கீழ்தரமாக எழுதுவது வசமையாகி விட்டது. இது நிச்சயம் வரவேற்கப்படுவது அல்ல.
நாம் யாவரும் கொஞ்சமாவது படித்தவர்கள். கல்வியோ வளர்ப்போ நமக்கு நல்வசமிகலையோ நாமரீகமோ வழங்கவில்லைஎன்றால் வேறு என்னதான் நமக்கு இவைகளை வழங்கும். 

Saturday, 1 January 2011

இன்னும் ஒரு வருடத்தின் ஆரம்பம். எழுத விஷயம் உள்ளோர்தான் எழுத வேண்டுமா. சும்மா பேசுவது போல் சும்மா எழுத கூடாதா?. எழுதும் விஷயங்கள்  பலனுள்ளதாகத்தான் இருக்கும் யாருக்காவது. மற்றவர்கள் கடந்து போக. இடுகைகளில் காயப்படுத்தாமலும் காயம்படாமலும் எழுத கற்றுக்கொள்வோமே
நாட்டு நடப்புகள் நல்லவையாக இல்லை. வரும் தேர்தல் நம்மில் பலரை யோசிக்க வைக்க வேண்டும். இதை எப்படி நல்ல வழிக்கு கொண்டு செல்வதென்று. கூடி  யோசிப்போமே