zNEvjjb-DUfexzIBNUrYwveacRI ராஜ்குமாரின் பக்கம்: என் எண்ணங்கள்

Tuesday, 4 June 2013

என் எண்ணங்கள்


தமிழரின் சில நிலைப்பாடுகள் எனக்குப்புரிவதே இல்லை. கடந்த நாற்பது- அய்ம்பது வருடங்களாக திராவிடக்கழகங்களையே தேர்ந்தெடுத்து வந்திருக்கிறோம். அதன் முந்தைய காலத்தில் காங்கிரஸ் ஆட்சி. இதை ஒப்பிட்டு நோக்குவதில் அடிப்படையான சிக்கல். அந்த அந்த காலநிலையில் உள்ள வேறுபாடுகள். சொல்வதானால் அடிமைப்பட்டிருந்த காலத்தில் கட்டமைப்பு வசதிகள் வெள்ளையர் வசதிக்கு மட்டுமே இருந்தன. அதில் நம்மவர் எப்படி காரியம் சாதித்துகொண்ட வகையில் நமக்கும் சில முன்னேற்றங்கள் கிடைத்தன. சுதந்திரத்திற்குப்பின்பு மக்கள் நலனுக்காக திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆகையால் முன்னேற்றம் கண்கூடாகத்தெரிந்தது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்ததாலும் வசதிகள் அதிகமாக செய்யப்பட்டிருக்கலாம். இந்த அடிப்படையில் தமிழகம் 1967க்கு முன்னும் பின்னும் கண்ட முன்னேற்றங்களை ஒப்பிட்டால் கிடைப்பதென்ன.
உதாரணத்திற்கு சாலை வசதிகள், மின்சாரம், சுகாதாரம், அடிப்படை கல்வி விவசாயம் ஆகியவை 67க்கு முன் செய்யப்பட்டவை அதற்கு பின் செய்யப்படவில்லை. தொழில் நுட்பம் தொலைத்தொடர்பு போன்றவை 67க்கு பின் முன்னேறின. இது ஒரு மேம்போக்கான ஒத்து நோக்கு. 
இதனிலும் முக்கிய விஷயம் அரசு மக்களுக்கு அடுத்தது திராவிட ஆட்சியில்தான். சுதந்திரத்திற்கு பிறகு ஆண்ட காங்கிரஸ் வெள்ளைக்காரர்களீன் பல பழக்கங்களை கடைப்பிடித்தது. அவர்கள் சட்ட மன்ற வேட்பாளர்கள் பெருப்பாலும் பணக்காரர்களூம், ஆதிக்க ஜாதிகளிலும் இருந்து வந்தவர்கள். இதற்கு நாற்பதுகளிலும், அய்ம்பதுகள்லும் திராவிட கட்சிக்கு ஆதரவு தேனீர் விடுதி, நாவிதர் கடைகள், போன்ற இடங்களில் இருந்துதான். திராவிட கழக பேச்சாளர்களூக்கு ஆகும் செலவுகளை சமாளிக்க அவர்கள் மனைவிகளின் நகைகள் வரை விற்ற கதைகள் உண்டு. இரவு பேசிவிட்டு நாவிதர் கடையில் உறங்கி விட்டு காலை உணவை தேனீர் கடையில் முடித்து விட்டு பேருந்துகளை பிடித்தனர் பல திராவிட கட்சி தலைவர்கள். அன்று ஆட்சியில் இருந்த காங்கிரஸ் காரர்கள் அவர்களின் பூர்வீக வசதிகளாலோ, அப்பொழுது இருந்த பதவியினாலோ மகிழுந்துகளில் வந்து மாளிகையில் தங்கிச்சென்றனர். அவர்கள் அனுபவித்தது பொதுப்பணமல்ல. பதவியிலிருந்த காங்கிரஸ்காரர்கள் அவர்களைப்பொறுத்த வரை சாதாரணமாக இருந்தாலும், பதவியின் மேல்பூச்சுகள் அவர்களை ஆடம்பரமாகத்தான் காட்டியது. 
திராவிடக்கட்சியினரின் அலங்கார ஆனால் அர்த்தமில்லாத பேச்சுக்கள் அன்றைய இளைஞர்களை கவர்ந்தது. அதற்கு மேல் சினிமா மாயை. அறுபதுகளில் கிராமத்து இளைஞர்களை கவர நினைத்த ககம்யூனிஸ்டுகள். மருவூர் கோபாலமெனொன் ராமச்சந்ரமெனொன் கவர்ச்சிக்குமுன் தோற்றனர். காங்கிரஸ் பேச்சை விட செயலை நம்பியது. செய்த நன்மைகளை மக்களுக்கு சொல்வதற்கு ஆகும் செலவில் இன்னொரு செயலையும் செய்து விடலாம் என்று நம்பினர். அறுபத்து ஏழுக்கு முன்பு வாய்ப்பு இல்லாததால் பல திமுகவினர் படாடோபமாக இருக்க முடியவில்லை. திரைத்துறையினாலோ, அல்லது வேறு வகையிலோ வசதியுள்ளவர்கள் ஆடம்பரமாகவே இருந்தனர். அது மக்கள் கண்ணில் தவறாகத்தெரியவில்லை.
இந்ந்லையில் அறுபத்துமூன்றில் அல்லது அதற்கடுத்த ஆண்டில் வெடித்த இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி. இந்தி ஆட்சிமொழி என்ற தீர்மானம் தமிழை கொல்வதற்கான சதியென்ற அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அன்று மக்களை தூண்டிய தலைவர்கள் அதனால் வரும் சாதக, பாதகங்களை யோசித்து முடிவெடுத்தார்களா? இல்லை. சிந்தித்து ப்பார்த்தால் இதன் பயன் என்ன? நடுவண் அரசில் இந்திதான் ஆட்சி செலுத்துகிறது. தமிழகத்தில் உள்ள மைய அரசு அலுவகங்களில் இந்தி இருக்கிறது. திருத்தணி தாண்டினால் வட்டார மொழி தெரியாவிட்டாலும் இந்தி இருந்தால் தொடர்பு கொள்ளலாம். ஆங்கிலம் இருந்தாலும். தமிழ் மட்டும் இருந்தால் போதாது. அது அன்று கிளர்ச்சியை தூண்டிய தலைவர்கள் உணர்ந்தார்களென்றால் அவர்கள் சாதாரணத்தமிழனை பலியிட்ட கயவர்கள். அதை அவர்கள் உணரவில்லை என்றால் தொலைநோக்கு இல்லா மடையர்கள். தமிழனுக்கு இந்தி தேவையில்லைதான், தமிழகத்தில் இருக்கும் வரை. ஆங்கிலம் இருந்ததால் இன்று பல துறைகளீல் தமிழன் முன்னேற முடிகிறது. ஆனால் தமிழ் முன்னேறமுடியாது. தமிழன் வாழ்ந்தால் தமிழ் வாழும். 
67ல் இருந்து இன்று வரை ஆட்சி செய்த கட்சிகள் தமிழகத்திற்கு நன்மை செய்தனவா, அல்லது தீமை செய்தனவா. அண்டை மாநிலங்களுடன் உள்ள உறவு. முல்லைபெரியார், காவிரி பிரச்சினைகளை மேலோட்டமாகப்பார்த்தாலெ நமக்கு நிலைமை புரியும். காவிரி நீர் வரத்து 72 வரை பொறியாளர், அரசு செயலர்கள் அளவிலேயே முடிவெடுக்கப்பட்டது. அன்று இருந்த செயலர் கர்நாடகத்தின் செயலரை அழைத்து நீர் திறந்துவிடச்சொன்னால் திறந்துவிடப்பட்டது. அதற்கு பின் அரசியல்வாதிகள் நுழைந்தவுடன் கதை கந்தல். முல்லைபெரியார் விவகாரத்தின் வேர் கடந்த நூற்றாண்டில். அன்றைய காலத்தில் முல்லைபெரியார் இருக்கும் இடம் அன்றைய திருவிதாங்கூர் அரசை சேர்ந்தது அல்ல. அன்று இருந்த வெள்ளையர் அரசு  அவர்களுக்கு சொந்தமில்லாத இடத்திற்கு வாடகை தருகிறேன் என்றவுடன் சரியென்று சொல்லி விட்டார் திருவனந்தபுரத்து மன்னர். சுதந்திரம் கிடைத்தவுடன் அதன் தொடர்ச்சியாக கல்லார் என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. அதன் நோக்கம் கேரள எல்லைக்குள் உருவாகி ஓடும் கல்லாறை மலையை குடைந்து இப்பக்கம் கொண்டு வருவது.
அதை அன்றைய கேரள முதல்வர் பட்டம் தாணுபிள்ளை சும்மா இருந்த அந்த காட்டில் இரவோடு இரவாக மக்களை கொண்டு வந்து இறக்கி குடிசை போட வைத்து அது மக்கள் குடியிருக்கும் பகுதி அவர்கள் பாதிக்கப்படுவர் என்று மறுத்து விட்டனர். திராவிட ஆட்சியில் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு மேலே உருவாகும் நீர்நிலை தமிழகப்பகுதியில் அழிக்கப்பட்டு கேரளத்துடன் சேர்க்கப்ப்ட்டுவிட்டது நான் கேட்ட செய்தி.

விவசாயத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் வழங்கி விசைமூலம் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வழி செய்யப்பட்டது. இன்று இலவச தொலைக்காட்சி, இன்னவை நாட்டின் உற்பத்தியை எப்படி பெருக்கும் என்று எனக்குத்தெரியவில்லை. காங்கிரஸுக்கு வோட்டு போடச்சொல்லவில்லை. ஆனால் இப்பொழுது ஆள்பவர்களை என்னால் சகிக்கமுடியவில்லை.

No comments:

Post a Comment