தமிழகத்தில் நான் அறிந்த மூன்று மாணவர் போராட்டங்கள்
சுதந்திரத்திற்கு முந்திய மாணவர் போராட்டங்களைப்பற்றி எனக்கு நேரடியாகதெரியாது. என் தந்தை சொல்லகேட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன். நான் நேரில் பார்த்த மூன்று போராட்டங்கள். அறுபதுகளின் முற்பகுதியில் இந்தி எதிப்பு போராட்டம், 73 செப்டம்பர் எம்ஜியார் ஆதரவு கிளர்ச்சி, இப்பொழுது பார்க்கும் ஈழம் பற்றிய கிளர்ச்சி. மூன்றிலும் நான் பார்வையாளனே. இரண்டு கடந்தவை, மூன்றாவது நிகழும் ஒன்று.
இதன் ஒற்றுமை, வேற்றுமைகள் என்ன.
இந்தி கிளர்ச்சியில் மொழிஉணர்வு அரசியல் தலைவர்களால் ஒருமுகப்படுத்தப்பட்டு அன்றைய ஆட்சியின் எதிர்ப்பாய் திருப்பிவிடப்பட்டது. மொழிப்போர் என்றழைக்கப்பட்டது. இதன் விளைவு மாணவர் சக்தி அடுத்த வந்த தேர்தலில் பயன்ப்டுத்தப்பட்டது. 67 தேர்தலில் கல்லூரி பேருந்தில் விருதுநகர் சென்று மருத்துவக்கல்லூரி மாணவர்கள் அந்த ஊர் தெருக்களில் வீடு வீடாகச்சென்று காலில் விழுந்து ஓட்டுக்கேட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அன்றைய அரசு ஆட்சியை இழந்ததற்கு இதுவும் ஒரு காரணம். இதன் பின்விளைவுகளை தமிழகம் இதுவரை சந்த்தித்து வருகிறது. 73ல் மாணவர்கள் கிளர்ந்து எழுந்தது எம்ஜிஆர் என்ற மனிதர் முன்வைத்து. அதற்கு முன்பும் அவருக்கு திமுகவில் நெருக்கடி நேர்ந்திருக்கிறது. அப்பொழுது அவர் நடித்து வெளி வந்த படம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் நான் அறிவது. எம்ஜிஆரும் திமுகவும் இணைந்து அடைந்த வெற்றிகள் அறுபதுகள் காலகட்டத்தில் அவரால் தனியாக அடைய முடியவில்லை. அன்று திமுகவில் இருந்தவர்கள் கட்சியினால் எம்ஜிஆர் அதரவாளர்கள். எழுபத்து மூன்றில் அண்ணா இல்லை. ஆட்சிப்பொறுப்பில் இருந்தனர். கொள்கைகள் நீர்த்துப்போய் தனிமனித வேறுபாடுகள் வீர்யம் பெற்றன. மேலும் இளைஞர்கள் மாணவர்கள் ஒரு லட்சியமென்று எம்ஜிஆரை ஆதரித்தனர். அவர் கட்சி எழுபத்து ஏழில் ஆட்சிக்கு வந்தது. இது இது வரை நடந்தவை.
இப்பொழுது நடக்கும் கிளர்ச்சி ஈழத்தை முன்வைத்து நடக்கிறது. இது தமிழகத்தில் என்ன அரசியல் மாற்றங்களை நிகழ்த்தும். அறுபத்து ஏழில் மாணவர் வேறு பல சக்திகளின் கூட்டாக ஆட்சியை மாற்ற காரணமாக இருந்தது. படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்ற காமராஜர் தோல்வியை தழுவியது மாணவர் முயற்சியால் மட்டுமல்ல. ஆனால் எம்ஜிஆர் ஜெயித்ததற்கு ஒரே காரணம் அவரது புகழ்தான், அவர் மீது மக்கள் சரியாகவோ, தவறாகவோ வைத்த நம்பிக்கை.அவர் மக்கள் முன்னெ வைத்த பிம்பம். அவர் உண்மையாகவே நினைத்த மதுவிலக்கைக்கூட கைவிட வேண்டியதாயிற்று. ஊழலும் அவர் ஆட்சியில் இல்லாமல் இல்லை.
இன்று நடப்பது யாருக்கு பலனளிக்கும். ஈழத்தில் வாழும் தமிழருக்கு நிச்சயம்மாக அல்ல. செல்வி ஜெயலலிதா மீதும், திரு கருணாநிதி மீதும் இதில் மக்களுக்கு நம்பிக்கையில்லை, ஆனால் ஓட்டு விழுவது இதைப்பொறுத்ததா என்று என்னால் சொல்ல முடிய வில்லை. வேறு யாரோ இதில் சரியாக காய் நகர்த்தினால் பலனடையலாம். அப்படி நகர்த்துபவர் தனித்து நின்றால் மக்களை தன் பின் நிற்கச்செய்தால் வெல்லலாம். இருக்கும் இரண்டு கட்சியுடன் கூட்டணி அமைத்தால் தேர்தலுக்கு பின் அவர்கள் கை விடப்படலாம்.
இன்றைய அரசியலில் இவ்விரு கட்சியிலும் இல்லாமல் கட்சி நடத்துபவர்கள் நாடாளுமன்றத்தேர்தலை தனித்து சந்தித்தால் பலன் கிடைக்கும்.
நான் அரசியல் விளைவுகளையே சொல்லக்காரணம் இதைத்தவிர்த்து ஒரு நல்ல விளைவும் இதனால் நடக்கவில்லை, நடக்கப்போவதுமில்லை. நடந்த ஆட்சி மாற்றங்கள் மக்களை மேம்படச்செய்யவில்லை. நாளை ஆட்சிகள் மாறினாலும் எதிர்பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றுமில்லை.
No comments:
Post a Comment