zNEvjjb-DUfexzIBNUrYwveacRI ராஜ்குமாரின் பக்கம்: ஈழம்

Wednesday, 3 April 2013

ஈழம்



எனது எண்ணங்கள்
தமிழ்நாட்டில் தற்பொழுது நடக்கும் நிகழ்வுகளை ப்பற்றி எழுத முற்பட்டதின் விளைவு இது. தீப்பற்றி எரியும் நிகழ்வு ஈழப்போராட்டம். கல்லூரி மாணவர்கள் வீதிக்கு வந்து மாதக்கணக்கில் போராடுகின்றனர். இணையத்திலும் ஊடகங்களிலும் எழுதுபவர்கள் இப்போராட்டத்தை ஒட்டியும், வெட்டியும் எழுதும் இவ்வேளையில் ஒரு நிலை எடுக்காதவர்களை தமிழனே அல்ல. துரோகி என்பது போன்ற அடையாளங்கள் முன்வைக்கப்படுகின்றன. நானும் என் கருத்துக்களை எழுத விழைகிறேன். என் பார்வையில்.
தமிழ் என்ற மொழியினால் ஒன்று பட்ட அதனால் ஒரெ இனமென்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தமிழ்நாட்டின் தென்கீழ் எல்லையில் இருந்து ஆறேழு கல் தொலைவில் உள்ள மக்களைப்பற்றிய விஷயமிது. 
இவர்கள் என்றோ ஓர் நாளில் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து அங்கு சென்றவர்கள். இலங்கையில் இருக்கும் மற்றொரு இனம். பாரத கண்டத்தின் வேறு ஒருபகுதியில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள். இது வரலாற்றுக்கூற்று. இன்று அல்லது சற்று முந்தைய காலத்தில் இவரிடையே எழுந்த சண்டையில் தமிழர்களின் நிலைப்பாடு, இன்றைய நிலையில் இல்லாமல் (not current state but over a period) சில கால வேளையாய் பார்க்க வேண்டுகிறேன்.
ஒரு ஆரம்பமாக ஆயிரத்து தொள்ளாரத்து நாற்பதுகளை எடுத்துக்கொள்ளலாம். இன்றைய நிலையை மட்டும் பார்க்க வேண்டும் என்பவர்க்கு எனது பதில். இது நம்மை மட்டும் பொறுத்த விஷயமல்ல. நமது செயல்கள் பாக் சந்திக்கு அப்பால் இருப்பவர்களை எப்படி பாதிக்கிறது என்பதையும் பார்க்கவேண்டும். இல்லை யென்றால் சில பத்திகளை கடந்து செல்லவும்.
பூகோளரீதியாக அடுத்து உள்ளதால் யாழ் தமிழர்கள் பல வகையில் தமிழகத்துடன் தொடர்பில் உள்ளனர். ஆனால் சிங்களவர் பாரத தேசத்துடன் உறவில் இல்லை. அவர்கள் இன்றைய இந்தியாவைப்பார்ப்பது ஒரு சண்டியரைப்பார்ப்பது போல. இந்திய அரசு அரசியல், பாதுகாப்பு ரீதியாக இலங்கை அரசை பல வகையிலும் அண்ட வேண்டிய நிலையில் உள்ளது. சுதந்திரத்திற்கு முன்பு ராஜாங்கம் வெள்ளையர் கையில் இருந்ததால் மக்கள் பயணிப்பது ஒரு வகையில் சுலபமாக இருந்தது. சுதந்திரத்திற்கு முன்பு கூட இலங்கை தனித்தே ஆளப்பட்டு வந்தது. அப்பொழுது கல்வியில் யாழ் தமிழர் முன்னேறி இருந்ததால் அரசு, மற்றும் தனியார் பதவிகளில் அவர்கள் விகிதத்திற்கு மேல் இருந்தனர். அப்பொழுது இங்கிருந்து சென்ற தமிழர்கள்(மலையக, மற்றும் வணிக, பதவி ரீதியாகச்சென்றவர்கள்) யாழ் தமிழரால் நம்மவர் என்று ஏற்றுக்கொள்ளப்படல்லை) சிரிமாவோ-சாஸ்திரி ஒப்பந்ததினால் பல தமிழர் அங்கு வாழும் உரிமை இழந்து வெறும் கையுடன் தமிழகம் திரும்பினர். அன்று யாழ் தமிழர் மலையகத்தமிழரை ஆதரிக்க்கத்தவறியது மட்டுமல்லாமல் அவர்களை வெளியேற்றுவதில்சிங்களவர்க்கு உடன் போனார்கள் என்பது வரலாற்று உண்மை.
நாற்பதுகளில் அரசு பதவிகளில் பெருவாரியாக யாழ் தமிழர் இருந்தது பெரும்பான்மையான சிங்களரை உறுத்தியதால் ஏதோ ஒரு விதியைக்கொண்டு வந்து தமிழரை ஒடுக்க ஆரம்பித்தனர். இது முறையா என்பது ஒரு புறம் இருக்க கல்வியிலும் ஒரு விதியைக்கொண்டு வந்து அதிலும் தமிழர் நிலை மோசமானது.
இதற்கு யாழ் தமிழரிடம் பல வகையில் எதிர்ப்பு தோன்ற ஆரம்பித்தது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து போய் அங்கு வேலை பார்த்த மலையகத்தமிழர் என்று அழைக்கப்பட்ட தமிழர் நிலை அனாதையாக்த்தான் விடப்பட்டது. அவர்களில் சிலர் அங்கு குடியுரிமை பெற்றிருந்ததால் அவர்கள் அங்கு இருக்க முடிந்தது.
அதற்கு பின் எண்பதுகளின் துவக்கத்தில் தீவிரம் பெற்ற ஆயுதம் தாங்கி போராடிய முயற்சிகளில் யாழ் தமிழர் மட்டுமே கலந்து கொண்டனர். தமிழ் முஸ்லீம்களும் மலையகத்தமிழரும் இதில் கலந்து கொள்ளவில்லை என்பதும் வரலாற்று உண்மை. எண்பதுகளீன் தொடக்கத்தில் ஆயுதம் ஏந்திய போராட்டங்களில் தர்ம நெறிகள் இரு தரப்பிலும் கடைப்பிடிக்கவில்லையென்பதும் வரலாற்று உண்மை. இதற்கு நான் எண் கண்ணால் கண்ட சாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதல் ஆவணங்கள். அதில் தொலைக்காட்சி நாடாவில் முதல் மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்ட சிங்கள காவலரைப் பார்த்தேன். அன்றைய கால கட்டத்தில் அகதிகளாக வந்த தமிழரை இயன்ற வரையில் உதவியவர்கள் பலர். அதில் நானும் ஒருவன். ஆனால் அவர்களின் ஒற்றுமையின்மை புலிகளின், குறிப்பாக பிரபாகரனின் செயற்பாடுகளில் எனக்கு ஒவ்வாமையே ஏற்பட்டது. TELO, PLOTE பொன்ற அமைப்புகள் சிங்கள அரசை விட புலிகளால் வேட்டையாடி அழிக்கப்பட்டதும் உண்மை. 
தொண்ணூற்று ஒன்றில் ராஜீவ் காந்தி கொலையுண்ட பொழுது ஒட்டு மொத்த தமிழகமும் விடுதலைப்புலிகளுக்கு எதிரானதும் வரலாற்று உண்மை. அன்று அக்குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வாதாடக்கூட எந்த வழக்கறிஞரும் முன்வரவில்லை. மக்கள் அன்றும் பின்னர் சில காலங்களுக்கு முன் வரை இதை(ஈழ நிலையை) ஒரு பொருட்டாக கொள்ளவில்லை. இதுவும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய விஷயம். 
இதில் அரசியல் தலைவர்கள் மக்கள் பொருட்படுத்தாதால் அவர்களும் பொருட்படுத்தவில்லை. திடீரென்று மாணவரிடையே இது பெரிதாக எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது. இது எவ்வாறு நிகழ்ந்தது. பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் கொலை ஒரு கிரியாஊக்கியாக கருதப்பட்டது. ஆனால் இரு தொடர்ந்து பரவ பின் புலத்தில் பல சக்திகளும் இருப்பதாக செய்திகள் உலவுகின்றன. 
இன்றைய நிலையில் தமிழ்நாடு தாண்டி வேறு எந்த அரசியல் சார்ந்த சாரா அமைப்புகளினால் இது ஆதரிக்கப்பட வில்லை. இன்று ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர் பெரும் அல்லருகின்றார்கள். அது சிங்கள இனவாதம் சிறுபான்மையினரை வேரருக்கும் ஒரு நிகழ்வு என்பதில் அய்யப்பாடில்லை. அதற்கு இந்திய நடுவண் அரசோ, மற்ற நாடுகளோ தலையிட்டு தமிழர் துயர் தீர்க்க வேண்டுமெனில் இன்று தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் எவ்வகையில் உதவும். இதன் பலன் என்னவாக இருக்கும். இந்தியாவின் மற்ற பகுதிகளையோ, உலகின் மற்ற நாடுகளையோ ஈழத்தின் பால் கவனம் கொள்ள வைக்குமா?
காணும் பலன் நடுவண் அரசையோ, மற்ற மாநில அரசுகளையோ இது எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பது வெள்ளிடைமலை. யாரும் ஈழத்தமிழர் துயர் தீர்க்க முன்வரவில்லை. இதனைப்புரிந்து கொள்ள மற்றவர்கள் நிலையிலிருந்து கொஞ்சம் யோசிப்போம். மற்ற மொழி பேசுவோர் மத்தியில் தமிழனைப்பற்றி என்ன நினைப்பார்கள். இது இலங்கையின் உள்நாட்டு விவகாரம். அவர்களைப்பொறுத்த வரையில் ருவாண்டா, பாலஸ்தீனம், போஸ்னியா போன்ற ஒன்று. ஈழத்தில்  எண்ணை அல்லது கனிமம் போல ஏதாவது வளம் இருந்தால் மேலைநாடுகள் கவனம் காட்டலாம். பனையும், பாலையும் உள்ள இலங்கையின் வட பகுதியை யாரும் விரும்பப்போவதில்லை. இந்நிலையில் நமது போராட்டம் எதிர் விளைவுகளையே அளிக்கும் என்பது என் எண்ணம்.மேலும் இப்போராட்டங்களில் புலி ஆதரவு பிம்பங்கள் பிம்பங்கள்இதற்கு நல்லதா/அல்லதா என்றால் அல்ல. காரணம் தமிழகத்தைத்தவிர வேறு எங்கும் புலிகள் மீதோ, பிரபாகரன் மீதோ நல்ல அபிப்ராயம் இல்லை.
இதற்கு வேறு வழி இருக்கிறதா என்று நாம் பார்க்க வேண்டும்.  முதலில் நம் நோக்கம் என்ன? ஈழத்தில் இன்று வாழும்/வாடும் தமிழருக்கு நல்வாழ்வை பெற வழி வகுப்பது. நல்வாழ்வு என்பது அவர்கள் உயிருக்கும் உடமைக்கும் உத்திரவாதமான வாழ்க்கை. அதற்கு
ஈழப்போரை நாம் தொடர முடியுமா. இந்த கேள்வியை நான் எழுப்பக்காரணம் அது முடியாது என்று பதிவிடத்தான், அடுத்த செயல்பாடு. சிங்கள அரசை எப்படி செய்ய வைப்பது. நாம் அங்கு இப்பொழுது செய்யக்கூடியது பொருளுதவி. அதை அங்கு கொண்டு சேர்க்க உத்திரவாதமான ஒரு இடை நிருவனம். அங்கு நடைபெறும் பணிகளுக்கு ஒரு மேற்பார்வை. இதனை செய்வதற்கு சிங்கள அரசை பலம் கொண்டு பணிய வைக்க முடியாது. என்ன செய்தால் அது நடக்கும். நான் நினைப்பது நம் நடுவண் அரசை இதைச்செய்ய வைக்கவேண்டியது. இன்று பாராளுமன்ற தேர்தல் வரும் வேளையில் இதைச்செய்தால் நமது வோட்டு கிடைக்கும் என்று புரிய வைப்பதே. இதை யார் செய்வது. இன்றைய தமிழக அரசியலில் உள்ள பெரிய கட்சிகள் இதற்கு உதவாது. காரணம் இவை வேறு வகையில் நம்பகத்தன்மை இழந்தவை. என் கண்ணில் பழ.நெடுமாறன் அல்லது வைக்கொ இருவரும்தான் தென்படுகிறார்கள். இதில் வைக்கோ அவரது புலி ஆதரவால் நம்பகத்தன்மை இழக்கிறார். இதைச்சொல்லும் பொழுது வைக்கோ மீது எனக்கு உள்ள தனி மரியாதையை பதிவு செய்ய விழைகிறேன். ஆனால் அவர் இதற்கு சரியான தேர்வு அல்ல என்பதே எனது நிலைப்பாடு. பழ. நெடுமாறன் இதில் தன்னலம் கருதி எதுவும் செய்ய மாட்டார் என்பதே என் எண்ணம். இவர்களை விட்டால் வேறு யாரும் எனண்ணில் தென்பட வில்லை. 
மத்தியில் யாரை அணுகுவது. இன்றைய காங்கிரஸ் அரசையே. காரணம் அவர்கள் ஆட்சியில் உள்ளனர். ideally தமிழக காங்கிரஸ் தலைவர்கள் காமராஜ் போல stature& reliability இருந்தால் அவர்களை அணுகலாம். ஆனால் அவர் போன்றோர் இல்லை. அப்ப்படிப்பட்டோர் அக்கட்சியில் வளர்க்கப்படவும் இல்லை. முதலில் நமது ஒற்றுமை, அடுத்தது அதை காட்டுவது. மூன்றாவது அதை வழி நடத்துவது. இவை போன்றவையே பலனளிக்கும்.
ஒரு சுயநிலை குறிப்பு.
நான் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன் இன்றைய கர்நாடகத்திலிருந்து புலம் பெயர்ந்த வழி வந்தவன். உணர்வால் தமிழன். அல்லது அப்படி நம்பிக்கொண்டிருப்பவன். பெரும்பான்மைக்கருத்திற்கு எதிர்மறையாய் என் கருத்து இருப்பதால் என்னை தமிழனில்லை என்று ஒதுக்கினாலும் என் கருத்தில் விஷயமிருக்கிறதா என்று பார்க்கவும். என் வம்சாவழி நான் தேர்ந்தெடுத்து வந்ததல்ல. என் உணர்வுகளுக்கு நான் பொறுப்பு. தமிழர் நலம் கருதுவதில் நான் யாருக்கும் குறைந்தவனல்ல.  

No comments:

Post a Comment