நான் வெட்டுப்பட்டு வீழ்ந்த அந்த கணத்தில் நான் என் ஊரின் கொள்கைகளிலிருந்தும், நம்பிக்கைகளிலிருந்தும் எவ்வளவு அன்னியமாகிவிட்டேன் என்பதை உணர்ந்தேன். சாகும் தருணத்தில் வாழ்ந்த வாழ்வு முழுவதும் ஒரு கணத்தில் தோன்றுமாமே. அது எனக்கு வாய்த்தது.
என் வாழ்க்கை முழுவதும் கண் முன் தோன்றினாலும் சொற்ப விஷயங்களையே எடுத்துரைக்க முடியும். இதை நீங்கள் படிக்குமுன் என் வாழ்வு முடிந்திருக்கலாம், அல்லது நான் பிழைத்திருக்கலாம். அது முக்கியமல்ல. என் உணர்வுகளும் அனுபவங்களும் உரைக்கப்பட்டு, நினைவில் வைக்கப்பட வேண்டும்.
முதல் காட்சி. சிறு கிராமமான எனது ஊரில் நாங்கள் மேலும் இல்லாத கீழும் இல்லாத ஒரு ஜாதி. நடுவாந்திரமாக இருந்தாலும், வசதியினாலும், எண்ணிக்கையினாலும் மேல் தட்டில் இருந்தோம். அடுத்தவனை அழுத்தி வைத்திருப்பது, வாழ்க்கைக்கு தேவையாக இருந்தது, மேலும் சௌகரியமாகவும் இருந்த்தது. பழக்கத்தில் இருப்பதை மாற்ற எனக்கு தோன்றவும் இல்லை. தோன்றியிருந்தாலும் மாற்றி அமைக்க என்னால் தனியாக முடிந்திருக்காது.
ஊரில் வலிமையான ஜாதி என்றாலும் அரசு ஏடுகளில் பின் தங்கியவர்களாக கருதப்பட்டோம். அதில் உள்ள ஆதாரமான அபத்தம் யாருக்கும் தோன்றவில்லை. என் கிராமம் ஒரு தனித்தீவல்லவே. படிப்பிற்கும், பிழைப்பிற்கும் மற்ற இடம் செல்லும் பொழுது அங்கு பற்றும் கொம்புகள் எங்கள் எண்ணங்களை மாற்றுவதற்கு பதிலாக மேலும் ஆழமாக பதிக்கவே உதவியது.
ஊரில் அடிமைப்பட்டு கிடந்தவன் நேர் கொண்டு பார்ப்பதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று எனக்கு கற்பிக்கப்பட்டது. அதன் விளைவாக வார்த்தையிலும் செயலிலும் மோதல்கள். என் சின்ன உலகை நகரம் விசாலப்படுத்தவில்லை. அல்லது நாங்கள் அதை அனுமதிக்கவில்லை. வன்மம் கொண்டு அலைவதும், சந்தர்ப்பத்தில் அடுத்த கும்பலைச்சேர்ந்தவர்களை தாக்குவதும் வழக்கம். அது போல் ஒரு நிகழ்வில் ஒரு பெண்ணை சந்தித்தேன். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு எங்கள் சண்டை எவ்வளவு சிறுமையானது என்று நான் அறிந்த நாள். கைகலப்பில் அன்று எங்களுக்கு வெற்றி. எதிரியென்று நான் நினைத்தவர்களில் பலருக்கு அன்று ரத்த காயம். பட்டினத்து தெருவில் ஜனம் சுற்றி நின்று பார்க்க யுத்தம். எங்களுக்கு வெற்றி. மார் உயர்த்தி, கால் பரப்பி நடந்தோம். பார்த்த பலரின் அறுவெறுப்பும், ஆதங்கமும் கண்களுக்கு படவில்லை.பலர் சேர்ந்து சிலரைத்தாக்கும் பொழுது பயமில்லை. வேட்டையாடும் கோர வெறி, குறையும் பொழுது, புணர்ந்து எழும் பொழுது ஏற்படும் ஒரு உணர்வைப்போல சுகமான ஒரு சோர்வு தெரியும். என் இந்த போதைகளையும் மீறி அந்த நாற்பது வயது வேற்று நாட்டுப்பெண்ணின் முக பாவங்கள் மனதில் பதிந்தன. அன்று அக்கணம் என்னைத்தாக்கவில்லை. அது வேறு ஒரு கணத்தில் நடந்த்தது.
காலம் என்னை நதியில் மிதக்கும் சருகைப்போல வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு சேர்த்தது. படித்ததும் பட்டம் வாங்கியதும் அதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத வேலை அமைந்ததும் சாதாரணர்க்கு ஏற்படுவதைப்போல எனக்கும் ஏற்பட்டது.
வேலையினால் வெளிதேச வாழ்க்கை.படிப்பு வேலையையும் தாண்டி தோல் நிறத்தால் கீழென்று மதிக்கப்படும் சந்தர்ப்பங்கள். சிறுபான்மையை சேர்ந்த ஒருவன் நேரடியாகவும் மறைமுகமாகவும் நசுக்கப்படுவது வலித்தாலும் என்னுள் வேறு மாற்றங்களை என் ஆதார துவேஷங்களை மாற்றும் தருணங்களை ஏற்படுத்தவில்லை.
காட்சி இரண்டு.
வேலை பார்க்கும் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் செல்ல வண்டியிருந்ததால் எனக்குள் ஒரு உலகத்தை அமைத்துக்கொண்டு வெளி உலகில் ஒட்டாமல் வாழ முடிந்த்தது. அலுவலகத்தில் வேலை நிமித்தம் சந்திப்பவர்கள் உண்மையாக பழக நேர்வதில்லை. வேலை தாண்டி உறவு இல்லாத்தால் அவர்கள் என்னைப்பற்றி உண்மையாக என்ன நினைக்கிறார்கள் என்று அறிவதற்கான சந்தர்ப்பங்களும் அமைய வில்லை. மூன்று அல்லது ஆறு மாதங்களே அவர்களுடன் இருக்க வேண்டியிருந்தது. ஆகவே ஒட்டோ உறவோ ஏற்படவும் இல்லை. ஒரு நாள் இன துவேஷத்தை நேருக்கு நேர் அனுபவிக்கும் வரை. அன்று நகரத்தின் மையத்தில் உள்ள கடைகளுக்கு சென்றேன். மிக குறைந்த விலையில் பொருட்கள் அங்குதான் கிடைக்கும். பார்ப்பதற்கு பார்வையாக ஷோகேஸில் வைக்கும் பொருட்கள் ஒன்றுக்கும் உபயோகமில்லாதவையாக் ஆனால் வெகு நாட்கள் பார்வையிலும் நினைவிலும் இருக்கும். குறைந்த விலை என்று கணிக்க முடியாது. அதே பொருட்கள் மற்ற கடைகளில் விலை அதிகமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் சிலருக்கு வாங்கிக்கொண்டு கொடுக்க வேண்டும். இதெல்லாம் வெளிதேச வாழ்க்கையில் சகஜமான விஷயங்கள். குளிர்காலத்தில் சீக்கிரம் இருட்டி விடும். மாலையில் சென்று பொருட்கள் வாங்கிகொண்டு நண்பர்களை பார்த்துவிட்டு வரவேண்டும். கடை கடையாக ஏறி இறங்கி பார்த்துக்கொண்டே வந்த்ததில் வழி தப்பி ஒரு தெருவில் நுழைந்து விட்டேன். வெளி நாடுகளில் ஆபத்திற்கும், பத்திரத்திற்கும் ஒரு தெருதான் வித்தியாசம். ஆபத்தும் திடீரென்று வரும். சில அடிகள் நடந்தவுடன் பின்னால் காலடிகள் கேட்டு திரும்பினேன். பதினேழு பதினெட்டு வயதுடைய நான்கைந்து சிறுவர்கள். வயது குறைவாக இருந்தாலும் தடி மாடுகள். புத்தியும் அந்த அளவில்தான் இருக்கும். தனியாகவோ, போதையில் இல்லாமலோ இருந்தால் பயமில்லை. இவ்விரண்டில் ஏதாவதொன்றோ அல்லது இரண்டும் சேர்ந்திருந்தாலோ உயிருக்கோ உடமைக்கோ ஆபத்து. என்ன செய்வதென்று தெரியவில்லை.
அட்ரீனலின் உடலில் பாய ஓடவோ, சண்டை போடவோ தயாரானேன். எதிர்த்து நிற்பவனை தாக்க யாராவது ஒருவன் ஆரம்பித்தால் மற்றவர்கள் வேட்டை நாய் போல் பாய்வார்கள். அதற்கு முன் ஏதாவது நடந்தால் தப்பிப்பேன். சண்டை போட தயாரானேன். திடீரென்று தெருமுனையிலிருந்து சப்தம். ஒரு இந்தியப்பெண். பெருங்குரலில் கத்திகொண்டு கையையும் காலையும் ஆட்டிக்கொண்டிருந்தாள். கூட்டம் கூட அரம்பித்தது. பையில் இருந்து காசையும் பணத்தையும் எடுத்து அவர்கள் முன்னால் வீிசினாள். அவர்கள் குனிந்து பணத்தையும் பொறுக்க ஆரம்பித்தனர். மெதுவாக நடுவில் புகுந்து நகர்ந்தேன்.காசா நானா என்று அவர்கள் முடிவு செய்வதற்குள் நாங்கள் ஓட ஆரம்பித்தோம். எனக்கு மூன்று தப்படிகளுக்கு முன் அவள் ஓடிக்கொண்டிருந்தாள். உயிராபத்திலும் அவளது பின்புறம் என்னை கவர்ந்தது. ஏதோ உணர்வில் திரும்பிப்பார்த்தவள் என் பார்வையின் திவிரத்தில் தடுமாறி விழப்போனாள். உணர்வின் பால் யோசிக்காமல் அவளைப்பிடித்து கீழே விழாமல் தடுத்தேன். உடல் தொட்டது எங்கள் இருவருக்கும் உணர்ச்சிகளை தூண்டியது. வேகத்தை குறைத்து நடக்கலானோம். ஆசுவாசப்படுத்திக்கொண்டு பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டோம். இருவருக்கும் பிரிய மனமில்லை. தயங்கித்தயங்கி பேச்சை வளர்த்தோம். மீண்டும் சந்திக்க முடிவுடன் பிரிந்தோம். இந்த நிகழ்வில் ஏனோ அன்று முன்பு பார்த்த வெளி நாட்டு பெண்ணின் முகம் அவள் முகத்தில் தெரிந்த உணர்வுகளும் நினைவில் வந்தன. இன்னும் அந்த உணர்வின் தாத்பரியம் இன்னும் பிடிபடவில்லை.
அவள் பெயர் தேன்மொழி. மென்பொருள் தொழிலில் ஒரு இந்திய கம்பெனியின் வெளி நாட்டு அலுவலகத்தில் வேலை. மற்ற வேலைசெய்வோருடன் தங்கியிருந்தாள். நமது நடத்தையை நிர்ணயிக்கும் அந்த நாலு பேர் இங்கு இல்லாததால் எங்கள் பழக்கம் தொடர்ந்தது. அவளை எனக்கு பிடித்திருந்தது. உறவு பழக்கத்தில்இருந்து அடுத்த கட்டத்திற்கு சென்றது. மணந்து கொள்ள முடிவு செய்த பொழுதுதான் அவள் ஜாதியும், ஊரும் தெரியவந்தது. அவள் எங்கள் எதிர் ஜாதி. ஊரும் ஊருக்கு அடுத்து. அவள் சொந்தம் எங்கள் ஊரில் எங்களுக்கு எதிராக. இருவரும் இதை எப்படி எதிர்கொள்வது என்றே சிந்தித்தோம். முடிவை மாற்றிக்கொள்ள இருவருக்கும் தோன்றவில்லை. மணந்து கொள்வதற்கு முன் வீட்டிற்கு சொல்லி சம்மதம் கேட்பதில் அர்த்தமில்லை.தீவிரமான எதிர்ப்பிருக்கும். மணந்து கொண்டு வீட்டிற்கு சொல்லிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். மணமும் முடிந்து ப்ரணவும் பிறந்தான். அவன் மூன்று வயதை அடையும் வரை நாங்கள் இந்த நாட்டுக்கு வரவில்லை. கடிதங்கள் முதலில் கோபமாக வந்தன. பின்பு அதுவும் நின்று விட்டன. தின வாழ்க்கையில் ஊரும் அதன் கோபங்களும் பின்சென்று மறைந்து விட்டது. ஊருக்கு திரும்பி நகரத்தில் தங்கி விட்டோம். ஒரு நாள் என் பெற்றோர் அழையாமல் சொல்லாமல் வீட்டுக்கு வரும் வரை.
ஆத்தா சாகக்கிடக்காப்பா. ஒரு எட்டு வந்து பாத்துட்டு போயிடுப்பா. மகன் எப்படியிருக்கிறான் என்ற கேள்வியில்லை. மருமகள் இருப்பதாக காட்டிக்கொள்ள வில்லை. சிரிப்பு வந்தாலும் காட்டிக்கொள்ளாமல் உட்காரவும் சாப்பிடவும் அழைத்தேன். ஆத்தா என்று சொன்னது என் பாட்டியை. என்னை வளரும் வரை மண்ணில் விடாமல் வளர்த்தவள். பாசம் போகச்சொன்னாலும் போகப்பிடிக்கவில்லை. மெதுவாக சொல்லி அனுப்பி விடலாம் என்று முடிவு செய்தேன். சாப்பிடாமலே புறப்பட்டு விட்டனர். ப்ரணவிடம் மட்டும் சொல்லிவிட்டு ஏதோ கையில் கொடுத்து விட்டு போனார்கள்.
ஊரிலிருந்து வந்த ஒரு கடிதம் எங்களை ஊருக்கு கொண்டு சேர்த்தது.ஆத்தா மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்தது. ஊரில் வந்து இறங்கியதும் ஜாதிக்கட்டுப்பாட்டை மீறிவிட்டதால் பஞ்சாயத்துக்கு வருமாறு உத்தரவு. அது எங்களுக்கு அர்த்தமற்றதாகத்தெரிந்தாலும் போவதென்று முடிவு செய்தோம். வீட்டில் போய் நுழைந்தவுடன் ஆத்தாவை நாங்கள் இருவருமாக பார்த்தோம். ஆத்தா என்னுடனும், ப்ரணவுடன் நன்றாக பேசினாள். தேனைஅவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. எதிர் பார்த்ததால் பெரிதாக அதிச்சியடைய வில்லை. மனைவியை வீட்டில் இருக்கச்சொல் லி விட்டு பஞ்சாயத்து நடக்குமிடத்திற்கு தனியாகப்போனேன். ஜாதியிலிருந்து தள்ளி வைப்பதாக தீர்ப்பு சொன்னார்கள். அதுவும் எதிர்பார்த்ததுதான். திரும்பி வரும்பொழுது தேன் எதிரே வந்தாள். அப்பொழுதுதான் எதிர்பாராதது நடந்தது.
என் தம்பி கையில் அரிவாளுடன் ஓடி வந்தான். பதினே̀ழு வயது. நான் வீட்டை விட்டு போகும் பொழுது பள்ளி போக ஆரம்பித்தவன். முகத்தில் அவ்வளவு குரோதம். செய்த பாவத்திற்கு தண்டனை கொடுக்கும் தேவதூதன் போல முகம். அனிச்சையாக முன்னே ஓடி தேனை என் பக்கம் இழுத்தேன். நான் பார்த்து வளர்ந்த அவன் அரிவாளை தூக்கும் பொழுது தாக்க ப்படுகிறோம் என்ற பயம் வரவில்லை. ஒரு விபத்தை தடுக்கும் உணர்வே தூக்கி இருந்தது. அவளை இழுத்து போடும்பொழுது அரிவாள் என் மீது பாய்ந்தது. கூர்ந்த முனை என் இடது தோளில் பாய்ந்து கீழே விழுந்தேன். ரத்தம் நான் பிறந்த மண்ணில் ஓட அரம்பித்தது. தான் செய்த காரியத்தின் விளைவு என் தம்பியை அங்கேயே சிலையாக நிற்க வைத்தது. இவ்வளவும் ஓடி நின்ற அந்த கணங்களில் அந்த நாற்பது வயது தாயின் உணர்ச்சிகளுக்கு அர்த்தம் புரிந்தது. "ஏண்டா மடையர்களா, உங்களுக்குள் என்ன வேற்றுமைகளுக்காக இப்படி அடித்துக்கொண்டு சாகிறீர்கள்?”

No comments:
Post a Comment