அந்த சாலையோரம் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தேன். நேரம் மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மழை பெய்து மீண்டும் பெய்வதற்கான ஆயத்தங்கள் தெரிந்தன. காலடியில் ஈரமண்ணும் லேசான சகதியும் கால்சட்டையின் ஓரங்களில் ஒட்டிக்கொண்டிருந்த்தது. வெளிச்சம் மங்கிய இரவில் நான் வந்த நகரத்தின் வெளிச்சம் லேசான ஒளியை கொடுத்துக்கொண்டிருந்த்தது.தார் சாலை மழையின் ஈரத்தில் ஒளியைப்பிரதிபலித்து ஒரு கருநாகம் போல் பளபளத்துக்கொண்டிருந்த்தது.
நான் நின்று கொண்டிருந்தது ஒரு பிரதான சாலையும் அதிலிருந்து பிரியும் கிளைச்சாலையும் சந்திக்கும் இடம். நேரம் ஏழு மணி. கிளைச்சாலையில் மூன்று கிலோமீட்டரில் நான் வசிக்கும் சிற்றூர். எட்டே முக்காலிருந்து எப்பொழுது வேண்டுமானாலும் வரும் பேருந்தைப்பிடித்து ஊருக்குச்செல்ல வேண்டும்.
நான் ஒரு அலுவலக ஊழியன். மனைவியும் இரு குழந்தைகளும் வீட்டில். மாதச்சம்பளம் மனைவியின் சிக்கனமான செலவில் அதிக க்கடனில்லாமல் வாழ்க்கையை ஓட்ட முடிந்தது. கல்லூரியில் படித்த காலத்தில் இலக்கியம், அரசியல் போன்ற பலவற்றில் ஈடுபட்டாலும் கால ஓட்டத்தில் குடும்பம் என்ற பந்த்தத்தில் என் பாதை தடம் புரண்டு போய்விட்டது. வீடு, அலுவலகம், லௌகீகம் என்று எண்ணங்கள் வேறு பாதைகளில் ஓட ஆரம்பித்து விட்டது.அரசாங்க வேலையானதால் வேலையும் வருமானமும் ஸ்திரமாக இருந்த்தது. சமூக சிந்தனைகள் மனதில் ஏதோ ஒரு மூலையில் அடைந்து விட்டன.
ஒரு நாளின் கடமைகள் முடிந்த்து அக்கடா என்று இருக்கும் பொழுது கடந்தவை பற்றி ஒரு சிறிய வருத்தம் கலந்த நினைவுகள் வரும். இளமையில் இருந்த கனவுகளும் ஆதர்சங்களும் கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டன. சோறு, வீடு, குடும்பம் சுற்றம் என்ற கவலைகள் கனவுகளைக் கலைத்து விட்டன.
அவ்வப்பொழுது பழைய நண்பர்களை ப்பார்க்கும் பொழுது கொஞ்ச நேரம் இலக்கியம் ஆர்ட் சினிமாஎன்று பேச்சும் அளவாளவல்களும் நீளும். பின்பு அவரவர்களின் குடும்பம் குழந்தை என்று போய்விடும். இன்றும் அப்படித்தான். அலுவலக விஷயமாய் அருகில் உள்ள மாவட்டத்தின் தலை நகரத்திற்கு சென்று விட்டு அப்பொழுதே திரும்பி இருந்திருக்கலாம். பழைய நண்பர்களை ப்பார்த்து பேசிக்கொண்டிருந்ததில் பொழுது கொஞ்சம் அதிகமாகவே கழிந்து விட்டது. திடீரென்று பெய்த மழையில் அரை மணி நேரம் விரயம். மெயின் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த பொழுது பஸ் கிடைக்க இன்னும் நேரமாகி விட்டது. பஸ் கிடைத்த இங்கு வர இன்னும் தாமதமாகி இப்பொழுது இங்கு நின்று கொண்டிருக்கிறேன்.
ஸாலையோரம், நிலவில்லா இரவில் இருக்கும் கொஞ்ச வெளிச்சமும் மேகத்தினால் மறைக்கப்பட்டிருந்தது. தனியாக நின்று கொண்டிருப்பது ஒரு இனம் தெரியாத கோபத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருந்தது. பஸ் வர இன்னும் ஒன்றரை மணி நேரமாவது ஆகும் என்று தெரிந்தும் கண்கள் சாலையை எதிர்பார்ப்புடன் பார்த்துக்கொண்ட்இருந்தது. மனம் ஏதேதோ எண்ணங்களை அசை போட்டுக்கொண்டிருந்த்தது. நண்பர்களுடண்பந் பேசிக்கொண்டிருந்தது சந்தோஷமாக இருந்தாலும் இப்பொழுது யோசிக்கும் பொழுது கொஞ்சம் சீக்கிரமாக கிளம்பி முந்தைய வண்டியைப்பிடித்திருக்கலாமோ என்று மனம் எண்ணியது. யாராவது பக்கத்தில் இருந்தாலாவது பேசிக்கொண்டிருக்கலாம். இந்த வேளையில் இந்த இடத்தில் யாரையும் எதிர் பார்க்க முடியாது
திரும்பி பின்னால் பார்த்தேன். வரிசையாக வீடுகள். பத்து பன்னிரண்டு இருக்கும். முக்கால் வாசி குடிசைகள். ஒரு கட்டிடம் காரை. உணவகம். ஆனால் இப்பொழுது மூடியிருந்த்தது. ஆள் நடமாட்டமே இல்லை.
ஒரு குடிசையில் சிறிது வெளிச்சம் கீரலாக த்தெரிந்தது. ஒரு உருவம் வெளியே வந்து என்னை நோக்கி வந்தது. மங்கலான வெளிச்சத்தில் ஆண் என்று தெரிந்தது. பத்தடி தூரத்தில் வரும் பொழுதே பீடி வாசனை. முகத்தில் இரண்டு நாள் தாடி. தலை நடுவில் வழுக்கை. மீசை திருத்தப்படாமல் வளர்ந்திருந்தது. சட்டை கீழ் இரண்டு பொத்தான்கள் மட்டும் போடப்பட்டிருந்தன. இடுப்பில் கைலி தூக்கிக்கட்டப்பட்டிருந்த்தது.
பீடியை கீழே போட்டு விட்டு அவன் பக்கத்தில் வந்தான். ஸ்நேகமான சிரிப்பு. ஆனால் ஏனோ இணக்கமாக தோன்றவில்லை. பதிலுக்கு சிரிக்காமல் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அவனைப்பார்த்தேன். பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பதை தெளிவாக அவனுக்கு உணர்த்த விரும்பினேன்.
மறு படியும் புன்சிரிப்புடன் பேச்சை ஆரம்பித்தான். திடீர்னு மழை பெய்ய ஆர்ம்பிச்சிருச்சல்லெ ஸார். ஆமா என்று சுருக்கமாக முடித்து விட்டு பஸ் வரும் பாதையை பார்க்க ஆரம்பித்தேன். ஏனோ இந்த பேச்சு நல்லதற்கல்ல என்று தோன்றியது. அவன் போவதாகத்தெரியவில்லை. மேலும் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தான். எந்த பஸ்ஸுக்கு ஸார்? போகும் ஊரைச்சொன்னேன்.ஸார் அந்த பஸ் வராது. ஒம்பதரைக்கு வரும் வேறு ஊர் பஸ் பிடித்துத்தான் போகணும் என்றான். நம்பாமல் இருக்க முடியவில்லை. என்ன செய்வதென்று புரியவில்லை. திரும்பி நகரத்திற்கு போவதென்றால் அனாவசிய அலைச்சல். யார் மேலோ கோபம் வந்தது.
சுற்றி யாரும் இல்லை. வேறு வ்ழியில்லாமல் பேச ஆரம்பிதோம். வேறு என்ன? அரசியல், சினிமா என்று போய்க்கொண்டிருந்தது. நிச்சயமாக இவனுடன் இலக்கியமோ அறிவியலோ பேச முடியாது. இந்த மாதிரி நேரங்களில் மற்றவர்களை பேச விட்டு கேட்டுக்கொண்டிருந்தால் போதும். பேச்சு நன்றாகவே ஓடும். இப்பொழுது அது நடக்கவில்லை. எனக்கு அதில் நாட்டமில்லை என்பதை வெகு சுலபமாக அவன் கண்டு கோண்டான். வேணுண்ணா வீட்டில் வந்த்து கொஞ்ச நேரம் உக்காந்துட்டெ போலாம் சார் என்று இயல்பாக ச்சொன்னான், ம்̀ழையும் இரவும் வேறு மார்க்கத்தை காட்டவில்லை. திடீரென்று இங்கு இருக்கும் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக யாரோ சொன்னது ஞாபகம் வந்தது. கால்கள் தயங்கின. சும்மா வந்துட்டு போகலாமில்ல சார். இயல்பாக அவன் சொன்னது நான் வேண்டாமென்றால் அவன் வற்புறுத்தப்போவதில்லை என்று காட்டியது. என்னை மீறி என்ன நடந்து விடுமென்ற தைரியத்தில் அவன் பின்னே நடந்தேன். வெளிச்சமில்லாத இரவில் பாதையில்லாத இடத்தில் அவன் காலடித்தடத்தை தொடர்ந்தேன்.
குடிசை, வெளியே திண்ணை, இரு பக்கமும், மண், சாணி மெழுகியிருந்தது. உட்கார்ந்து உள்ளே பார்த்தேன். காட்சி என்னை பாதித்தது என்றால் மிகையில்லை. அடிவயிற்றில் எட்டி உதைத்ததைப்போல்.
சிறு சிம்னி விளக்கை கையில் ஏந்தி வந்தவளின் முகத்தில் ஒளி கீழே இருந்து அடித்தது. அழகு பார்ப்பவன் பார்வையில் உள்ள விஷயம். அவள் அழகு உறுத்தாத, முகத்தில் அடிக்காத அழகு. ஒரு இளைஞனாக இருந்தால் வீதியில் தாரளமாக கூட்டிச்செல்லாம். மனைவி என்றே நினைப்பார்கள். என் வயதில் அவளை அழைத்துச்சென்றால் மகளென்று நினைப்பர்.
ஐநூறு ரூபா சார். ராப்பூரா தங்கிட்டு காலையிலெ போகலாம் என்ற அவன் பேச்சு என்னை நிதர்ஸந்த்திற்கு கொண்டு வந்தது .
அவளை மறுபடி பார்க்க வேண்டுமென்று தோன்றியது. விபசாரி என்ற உருவகத்திற்கும் நான் பார்ப்பதற்கும் சம்பந்தமேயில்லை. சாயம் பூசிய உதடு, மாவு அப்பிய முகம், சாயம் போன சேலை, கண்களீலும் முகத்திலும் காமம் என்ற என் மனச்சித்திரத்திற்கு ஒரு விதத்திலும் ஒத்து வராத அந்த உருவத்தை மறு படியும் பார்க்க விரும்பினேன். என்னை ப்பொருத்த வரையில் விபசாரியிடம் போவது என் ஆண்மைக்கு ஒவ்வாத செயல். என் விருப்பம் போலவே விரும்பும் ஒரு பெண்ணுடன் முயங்குவதற்கு யாரும் யாரிடமும் கூலி வாங்குவது எனக்கு சரியாகப்ப்டவில்லை. இது என் கோட்பாடு. அதன்படி நான் நடக்கிறேன். இது வரை அப்படியே.
ஆனால் இந்தப்பெண். குழந்தைத்தனமான இந்த முகம். நிர்மலமான இந்த இவள். ஒரு தகப்பனான நான். இவளை வீட்டிற்கு அழைத்துச்சென்று பள்ளிக்கோ, கல்லூரிக்கோ அனுப்பி நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து கொடுப்பது வரை ஒரு நிமிடக்கற்பனையில் வாழ்ந்து விட்டேன்.
திடீரென்று காரணமில்லாத, இலக்கிலாத கோபம் வந்தது. இது வரை விபச்சாரத்தை ப்பற்றி தீவிரமான சிந்தனை ஒன்றும் இருந்ததில்லை. யாரையோ பற்றிய விஷயம் என்றெ நினைத்திருந்தேன். நான் என் வாழ்வில் அதை சந்திப்பேன் என்று நினைத்ததில்லை. ஆகையால் அதை எப்படி எதிர் கொள்வதென்று தெரியவில்லை. அங்கிருந்து சென்று விடுவது எளிது. ஆனால் அவள் முகம். கதவின் மறைப்பில் ஒரு எதிர்பார்ப்புடன் என்னை ப்பார்க்கும் அந்த பார்வை. என்னை யோசிக்கவைத்தது. இதிலிருந்து மீள்வது எப்படி என்று தெரியவில்லை.
பாலில்லாத பொடிக்காப்பி அவள் கொண்டு கொடுத்த பொழுது அந்த சூழ்நிலை ஒரு சர்ரியலிஸ்டிக் அபத்தம் இருப்பதாகப்ப்ட்டது. வழக்கமாக இந்த சூழ்நிலையில் கேட்கும் கேள்வி நீ எப்படி இந்த தொழிலுக்கு வந்தாய் என்பது. அது என் முன்னிருக்கும் பிரச்சனைக்கு ஒரு வழியும் காட்டப்போவது இல்லை.
இதை எப்படி எதிர் கொள்வது?
காப்பியை ஒரு நேரம் கடத்தும் உபாயமாக மெதுவாகக்குடிக்க ஆரம்பித்தேன். எனக்கு அங்கிருந்த மௌனம் கனமாகத்தெரிந்தது. அவர்கள் இருவரின் முகங்களும் அரை இருட்டில் என் மனோ பாவத்திற்கு ஏற்றாற் போல் கற்பனை செய்து கொள்ள ஏதுவாக இருந்தது.
காப்பி குடித்து முடிப்பதற்குள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். காப்பியை கீழே வைத்துவிட்டு பணத்தை எடுத்து எண்ண ஆரம்பித்தேன். வழக்கமாக நான் எவ்வளவு பணம் எடுத்து செல்வது என்று அவள்தான் முடிவு செய்வது. முக்கால் வாசி நேரங்களில் சரியாகத்தான் இருக்கும். ஆகையால் என்னிடம் எவ்வளவு பணம் இருக்குமென்பது எண்ணி ப்பார்த்தால்தான் தெரியும்.
முன்னூற்றுச்சில்லறை. சிரிப்பு வந்தது. அனாவசிய செலவாளி என்று என்னைப்பற்றி அவளுக்கு எண்ணம். ஆகவே எண்ணி கொடுத்தனுப்புவாள். ஆனால் அத்யாவசிய செலவுக்கென்று ஒரு ஐனூறு ரூபாய் நோட்டு உள் மடிப்பில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். அதை எடுத்து செலவளித்தால் மனைவியிடம் தகுந்த காரணம் சொல்ல வேண்டும்.
இது நிச்சயமாக அத்யாவசியமான செலவு, என்னைப்பொருத்தவரையில். அதை எடுத்து அவனிடம் கொடுத்தேன். எனக்கு இந்தப்பெண்ணுடன் படுப்பதற்காக இந்தப்பணத்தை கொடுக்கலை. இன்னைக்கு இவளை வாடகைக்கு எடுத்திருக்கிறேன். வீட்டில் இந்தப்பெண் சும்மா இருக்கட்டும். நான் பஸ் பிடித்து கிளம்புகிறேன் என்று புறப்பட்டேன்.
அவள் அப்பொழுதுதான் முதலாகப்பேசினாள். எங்களுக்கு பிச்சை வேண்டாங்க. குரலில் உறுதியும், கோபமும் சரிபங்காக இருந்தது.
இதை பிச்சையாகவோ சும்மாகவோ கொடுக்கவில்லை, இன்றிரவுக்கு நான் பணம் கொடுத்திருக்கேன்மா. அதை எப்படி செய்றதுங்றது நான் முடிவு செய்யணும்.
இது போல் ஒரு கிறுக்கனை அவர்கள் பார்த்திராததாலோ என்னவோ அவர்களுக்கு அதை எப்படி எதிகொள்வதென்று தெரியவில்லை. ஒரு வேளை சாப்பிட்டுட்டு போங்களேன் என்றாள் அவள். அதில் ஒன்றும் எனக்கு எதிர்கருத்து இல்லாததால், என் வண்டி வருவதற்கு இன்னும் நேரமிருப்பதால் சாப்பாடு தயாராவதற்காக காத்திருந்தேன். பேச்சு இலக்கில்லாமல் போய்க்கொண்டிருந்தது.
அவளால் பணம் பெற்றதற்கு சமாதானப்படமுடியவில்லை. அவர்களுக்குள் விட்டுவிட்டு அந்த பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. நான் என் நிலையை விளக்கவேண்டிவந்தது.
அம்மா, எனக்கு உன்னுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் காசுக்காக இந்த தொழில் எனக்குச்சரியாகவும் படவில்லை. உலகத்தில் இதை என் தனி ஒருவனால் ஒழிக்கவும் முடியாது. அதற்காக ஒன்றும் செய்யாமலும் இருப்பதற்கும் முடியவில்லை. இதை இன்று செய்வதால் ஒரு பெண்ணை ஒரு நாள் இதிலிருந்து காப்பாற்ற நினைக்கிறேன். நான் இப்பணத்தை எவ்வளவு நியாயமாகக்கொடுக்கிறேனோ, அதைப்போலவே நான் போன பிறகும் இன்று வேறு யாரையும் கூப்பிடாமல் இருப்பதே உன் பங்குக்கான நியாயம் என்று நினைக்கிறேன்.
இந்த சொற்களுக்குப்பிறகு அங்கு கனத்த மௌனமே நிலவியது.
சாப்பாடு நன்றாகவே இருந்தது.
பஸ் பிடித்து ஊர் வந்து சேரும் பொழுது மணி பத்தரை. வீடு சேரும் பொழுது மனைவி கலந்த தலை, தூக்கம் நிரம்பிய கண்களுடன் வந்து கதவைத்திறந்தாள். வ்ழக்கம் போல ஏங்க இவ்வளவு நேரம்? நான் எத்தனை மணிக்கு வந்தாலும் இந்தகேள்விதான் வரும். தேவடியா வீட்டுக்கு போயிட்டு வந்தேன். சிறிது கூட ஆச்சரியமோ கோபமோ படாமல் என்னத்துக்கு? என்று அவள் கேட்டபொழுது அவளை கட்டியபடியே எதுக்கு போவாங்க? என்றேன்.
மத்தவங்க அதுக்கு போவாங்க? நீங்க அதுக்கு போகமாட்டீங்க, அதான் கேக்குறேன். எதுக்கு போனீங்க?
ஒரு நிமிடம் திக்கென்று கண்களில் நீர் முட்டியது. இத்தனை நம்பிக்கையை நான் எப்படி நான் காப்பாற்றப்போகிறேன்.
நடந்ததை சொன்னேன்.
விடுங்க எல்லாரும் காசு குடுத்து உடம்பை வாடகைக்கு பிடிப்பாங்க, நீங்க அவ் மனசில் இடம் பிடிச்சிருக்கீங்க, வந்து படுங்க.
படுக்கையில் விழுந்த பொழுது அவ்வளவுதானா? அவள் மனசில் கொஞ்சம் இடம்தானா என்று தோன்றியது.

No comments:
Post a Comment